வியாழன், 11 ஜனவரி, 2018
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை : ஆதார் கார்டு போல வழங்கப்படும்
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை : ஆதார் கார்டு போல வழங்கப்படும்
ஆதார் கார்டு போல் இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான 'யுனிக் ஐடி' கார்டு வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளதாக,
மாற்றுத் திறனாளிகள் நல துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தனியே அந்தந்த மாநில அரசுகள் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் கார்டை போல் ஒரே மாதிரியான யுனிக் ஐடி கார்டை வழங்க முடிவு செய்துள்ளது.
ஆதார் கார்டில் இடம் பெறும் விவரங்கள் போல், இந்த அடையாள அட்டையிலும் 40 சதவீதத்துக்கு மேல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளியின் பெயர், வயது, முகவரி, ஆதார் எண், ஊனம் தொடர்பான விபரங்கள், குயிக் ரெஸ்பான்ஸ் கோடு இடம் பெற்றிருக்கும். இலவச அட்டை இந்த அடையாள அட்டை பெற மாற்று திறனாளிகள் ரேஷன், ஆதார் கார்டு, ஜாதி மற்றும் மருத்துவ சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படம் கொடுத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தால் போதும்.
இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு பிரத்யேக மென்பொருள், லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.அங்கு அவர்களின் புகைப்படத்துடன், முழு விபரங்களையும் பதிவேற்றம் செய்து மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும். மாற்று திறனாளிகளுக்காக ஆதார் கார்டை போல் கை விரல் ரேகை, கண் விழி பதிவு செய்யும் முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
'மத்திய அரசின் அடையாள அட்டை பெற தனியார் கணினி மையம், நெட் சென்டர்களில் பணத்தை கொடுத்து மாற்றுத் திறனாளிகள் ஏமாற வேண்டாம்' என, அதிகா ரிகள் தெரிவித்தனர்
ஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்
ஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்
மார்ச் 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொருவரின் ஆதார் அட்டையிலும் அவரது புகைப்படம், பெயர் விவரம், முகவரி, கண் கருவிழி படலம், கை பெருவிரல் ரேகை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அதில் 12 இலக்கங்கள் கொண்ட எண்ணும் இடம்பெற்று இருக்கிறது.
வங்கி கணக்கு தொடங்குவது, செல்போன் இணைப்புக்கான சிம் கார்டு வாங்குவது, சமையல் கியாஸ் இணைப்பு, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது போன்றவற்றுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இதனால் இதுபோன்றவற்றுக்கு ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை தெரிவிப்பது மிகவும் கட்டாயம் ஆகிறது.
இப்படி பல இடங்களிலும் ஆதார் அட்டையை பயன்படுத்தும் போது, அந்த அட்டைதாரரை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் மூலம் வங்கி கணக்குகளில் மோசடி நடைபெற வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் திருடப்படுவதை தடுத்து, தனிநபர் ரகசியத்தை பாதுகாக்கும் வகையில், ஆதார் அட்டைக்கு மாற்றாக அதேபோன்ற புதிய அடையாள அட்டை முறையை (மெய்நிகர் ஆதார் அட்டை) இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (உதய்) நேற்று முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் இணையதள முகவரிக்கு சென்று இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை உருவாக்கி பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், பெயர் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் இப்புதிய அட்டையில் இடம் பெற்று இருக்கும்.
ஆனால் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணுக்கு பதிலாக இந்த புதிய அடையாள அட்டையில் 16 இலக்க எண் இருக்கும். சம்பந்தப்பட்ட நபரே இந்த எண்ணை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது விரும்பும் குறிப்பிட்ட காலவரை வரை இந்த புதிய அட்டையை பயன்படுத்தலாம். தேவைப்படும் போதெல்லாம் இந்த அடையாள அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை மாற்றி புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அப்படி புதிய அட்டை பெறும் பட்சத்தில், ஏற்கனவே பெற்று இருந்த மெய்நிகர் ஆதார் அட்டை தானாக ரத்தாகிவிடும்.
இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபரின் உண்மையான ஆதார் எண் மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளப்படுவது தவிர்க்கப்படும். முக்கியமாக தனிநபர் ரகசியம் காக்கப்படுவதோடு, தகவல் திருட்டும் தடுத்து நிறுத்தப்படுகிறது.
ஆதார் அட்டை எந்தெந்த இடங்களில் எல்லாம் தேவைப்படுமோ, அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு யாரும் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை மோசடியாக தயாரிக்க முடியாது.
வருகிற மார்ச் 1–ந் தேதி முதல் இந்த மெய்நிகர் ஆதார் அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வர இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தீர்மானித்து உள்ளது. மேலும் ஆதார் அட்டை எங்கெங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை ஜூன் 1–ந் தேதி முதல் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறையை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
மேற்கண்ட தகவல்களை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்து உள்ளது.
சி.பி.எஸ்.சி., பொது தேர்வுகள் மார்ச் 5ல் துவக்கம்!!
சி.பி.எஸ்.சி., பொது தேர்வுகள் மார்ச் 5ல் துவக்கம்!!
சி.பி.எஸ்.சி., பள்ளிகளுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது.
12ம் வகுப்பு தேர்வுகள் ஏப்.,12ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்.,4ம் தேதி வரையிலும் நடக்கிறது. இத்தகவலை சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது
இன்ஜி., கல்லூரி தேர்வு தள்ளி வைப்பு
இன்ஜி., கல்லூரி தேர்வு தள்ளி வைப்பு
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஜன., 13 முதல், ஏற்கனவே விடுமுறை விடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், ஜன.,12 வரை தேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், பஸ் போக்குவரத்து பிரச்னையால், பள்ளி, கல்லுாரிகளுக்கு மட்டும், இன்று முதல் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும், 17ம் தேதி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன.
இதையடுத்து, அண்ணா பல்கலை உட்பட அனைத்து கல்லுாரி, பல்கலைகளிலும், இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுஉள்ளன. 'அண்ணா பல்கலையில், இன்று நடக்கவிருந்த தேர்வுகள், வரும், 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன; 18ம் தேதியில், தேர்வு எதுவும் நடக்காது' என, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா, அறிவித்துள்ளார்.
11 மொழிகளில் 'நீட் 'நுழைவு தேர்வு
11 மொழிகளில் 'நீட் 'நுழைவு தேர்வு
தமிழ் உட்பட, 11 மொழிகளில், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, மத்திய அரசின், 'நீட்' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை நடத்த, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், மத்திய அரசின் சலுகை கிடைக்காததால், 2017ல், 'நீட்' தேர்வின்படியே, மாணவர் சேர்க்கை நடத்தும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு, 'நீட்' தேர்வை, தமிழகம் உட்பட எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. இந்த தேர்வு, மே மாதம் நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில், வினாத்தாள் இருக்கும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது, எந்த மொழி என்பதை குறிப்பிட்டால், அந்த மொழியில் வினாத்தாள் வழங்கப்படும். அதே மொழியில், விடைகளை எழுதலாம். இந்த தேர்வுக்கான அறிவிப்பு, இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீட் தேர்வு வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம்
நீட் தேர்வு வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம்
நீட் தேர்வு வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி வியாழக்கிழமை பேசியது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காதவராக இருந்தார். ஆனால், தற்போதைய அரசு அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜக அரசு புறக்கணித்து வருகிறது. அது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சி முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வெள்ளப்பெருக்கு, வர்தா புயல், வறட்சி நிவாரணம், ஒக்கி புயல் போன்றவைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு கோரிய நிதிகளைக் கேட்டுப் பெற முடியாத நிலை உள்ளது என்றார்.
அப்போது அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டு கூறியது:
ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள். காங்கிரஸ் ஆட்சியில் தமிழக அரசு சார்பில் நிவாரணம் கேட்கப்பட்டது. அந்த நிதியையெல்லாம் முழுமையாக காங்கிரஸ் கொடுத்துவிட்டதா? என்றார்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: நீட் தேர்வுக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினோம். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு கொடுக்கலாம் என்று கூறும் நிலையும் ஏற்பட்டது. இரண்டு மத்திய அமைச்சர்களிடமும் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க சாதகமான பதில் பெறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி தொடுத்த வழக்கின் காரணமாகத்தான் தமிழகத்துக்குப் பாதகமான தீர்ப்புக் கிடைத்தது.
கே.ஆர்.ராமசாமி: நீட் தேர்வில் விலக்கு பெற்றுவிடுவோம் என்று மாணவர்களுக்கு இறுதி வரை நம்பிக்கை அளித்தீர்களா இல்லையா?
அமைச்சர் விஜயபாஸ்கர்: தமிழகத்துக்குச் சாதகமான முடிவு வந்துகொண்டிருந்த நிலையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி தொடுத்த வழக்கின் காரணமாகத்தான் தீர்ப்பு மாறியது. அதனால், இந்த விவகாரம் குறித்துப் பேசுவதற்கு காங்கிரஸுக்கு தார்மிக உரிமை இல்லை.
கே.ஆர்.ராமசாமி: மாணவர்களைத் தேர்வுக்குத் தயாராகச் சொன்னது இந்த அரசுதான். அனிதா மரணத்துக்கு என்ன பதில்?
அமைச்சர் சி.வி.சண்முகம்: உச்சநீதிமன்றத்தில் கடைசி வரை போராடினோம். நீதிமன்றத்துக்குச் செல்லும் முன்னே தோற்றுவிடுவோம் என்றா சொல்ல முடியும்? இப்போதும் சொல்கிறோம். நீட் தேர்வு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அதன் இறுதித் தீர்ப்பில் நிச்சயம் வெற்றிபெறுவோம்.
கே.ஆர்.ராமசாமி: தனிப்பட்ட முறையில் யாரைப் பற்றியும் பேசக்கூடாது. முன்னாள் முதல்வர் குறித்தும் என்னாலும் பேச முடியும். வீம்பாகப் பேசுவது விபரீதமாகத்தான் இருக்கும்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: காவிரி விவகாரம், முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு விவகாரம் என தமிழக உரிமைகள் பறிபோவதற்கு காங்கிரஸ் அரசுதான் காரணம். தமிழகத்துக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்பதை பட்டியலிட்டுச் சொல்ல வேண்டும்.
கே.ஆர்.ராமசாமி: இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்ததே காங்கிரஸ்தான். அதனால்தான், நீங்கள் எல்லோரும் அமைச்சர்களாக உள்ளீர்கள்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்: சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸைக் கலைத்துவிட வேண்டும் என்று காந்தி கூறியதையும் நினைவூட்டுகிறேன் என்றார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
இனி ஆண்டுதோறும் TET - வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு
இனி ஆண்டுதோறும் TET - வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு
தற்போது பின்பற்றப்பட்டுவரும் வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர்,
இடைநிலை ஆசிரியர் நியமனங்களைத் தொடர்ந்து மேற்கொள்வது என்றும், ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்துவது என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தற்போது அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இம்முறையில், தகுதித்தேர்வு, பிளஸ் 2 தேர்வு, பட்டப் படிப்பு, பிஎட் (இடைநிலை ஆசிரியர் எனில் ஆசிரியர் பயிற்சி தேர்வு) ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்து முடித்தவர்கள் வெயிட்டேஜ் முறை நியமனத்தால் பாதிக்கப்படுவதாகவும், எனவே, தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து, இதுகுறித்து ஆராய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
வெயிட்டேஜ் முறை தொடரும்
இந்த நிலையில், வெயிட்டேஜ் முறையில் தரவரிசை தயாரிப்பது தொடர்பான உயர்நிலைக்குழு கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் சென்னையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
* கடந்த 30.5.2014 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி, வெயிட்டேஜ் முறையையும், 6.2.2014-ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி,தகுதித்தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுபிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள்) வழங்கப்பட்டு வரும் 5 சதவீத மதிப்பெண் சலுகையை (ஆசிரியர் தகுதித்தேர்வில் 150-க்கு 82 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி) தொடர்ந்து கடைபிடிக்கலாம்.ஆண்டுதோறும் தகுதித் தேர்வு
* கடந்த 15.11.2011 வெளியான அரசாணையின்படி, தகுதித்தேர்வை ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடத்தப்பட வேண்டும்.
* தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்என்பதால் அதன் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலில் உள்ள தேர்வர்களின் பெயர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கப்படும்.
* தேர்வர்கள் தங்கள் கல்வித்தகுதியைப் பொறுத்தவரையில் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள வழிவகை இருப்பதால் அதன்படி தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டது ஆகும்.
மதிப்பெண்ணை உயர்த்தலாம்
* 15.11.2011-ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கும், அதேபோல், ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தேர்வெழுதி மதிப்பெண்களை உயர்த்திக்கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டிருப்பதாலும், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் தகுதித்தேர்வு முடிவின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
* வரும் காலத்தில் தேர்வர்களின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கலாம்.இதனால், அனைவரின் கல்விச்சான்றிதழ்களைத் தரவரிசைப் பட்டியலுக்காக சரிபார்க்கும் அவசியம் எழாது. பணிநியமனத்தின்போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
* பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவில் தெரிவிக்கப்பட்டுள்ள, தகுதித்தேர்வு தேர்ச்சிக்குப் பிறகு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்துவது (ஆந்திராவில் இம்முறை பின்பற்றப்படுகிறது) என்பது அவசியமற்றதாக கருதப்படுகிறது.ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளின்படி, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு, தகுதித்தேர்வில் தேர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களைத் தேர்வுசெய்யலாம்.
* ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படையிலோ அல்லது தரவரிசைப்பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றிருக்கிறது என்ற அடிப்படையிலோ தேர்வர்கள் அரசு வேலைக்கு உரிமை கோர இயலாது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்
இஸ்ரோ'வின் புதிய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி நியமனம்!
இஸ்ரோ'வின் புதிய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி நியமனம்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான, 'இஸ்ரோ'வின் புதிய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி, சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவராக பொறுப்பு வகித்து வரும், கிரண் குமாரின் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, புதிய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த,பிரபல விஞ்ஞானி, சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, மத்திய அமைச்சரவை நேற்று பிறப்பித்தது.
சிவன், நாகர்கோவிலில் உள்ளவல்லன்குமரவிளை கிராமத்தில் பிறந்தவர். சென்னை, எம்.ஐ.டி.,யில், 1980ல், பொறியியல் பட்டம் பெற்றார்.இதன்பின், பெங்களூரின் இந்திய அறிவியல் கழகத்தில், முதுகலை பட்டம் பெற்றார். மும்பை, ஐ.ஐ.டி.,யில் ஆராய்ச்சி படிப்பிலும் பட்டம் பெற்றார்.
இஸ்ரோவில், 1982ல், பணியில்சேர்ந்தார். பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டு களின் வடிவமைப்பில் துவங்கி, அவை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது வரை, இவரது பணிகள், பலரது பாராட்டையும் பெற்றுள்ளன.
இஸ்ரோவின் மெரிட் விருது, டாக்டர் பிரேன் ராய் விண்வெளி அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுஉள்ளார்.சிவன், தற்போது, திருவனந்தபுரத்தில் உள்ள, விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தின் இயக்குனராக பதவி வகித்து வருகிறார்
400 ஊழியர்கள் பணிநீக்கம்: ஏர் இந்தியா அதிரடி!
400 ஊழியர்கள் பணிநீக்கம்: ஏர் இந்தியா அதிரடி!
ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஏற்கெனவே இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நீக்கிவிட்டு, ஓய்வுபெற்ற ஊழியர்களைப் பணியமர்த்த ஒப்பந்தங்களைப் போட்டது. இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தொழில்நுட்பப் பிரிவைச் சாராதவர்கள் என ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மத்திய அமைச்சகம் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள அரசின் பங்குகளை விற்க அனுமதியளித்தது. இதையடுத்து கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஏர் இந்தியா நிர்வாக இயக்குநரகம், தொழில்நுட்பப் பிரிவு இல்லாத மற்றும் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்தது. இந்தப் பணிநீக்கத்தில் ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களான ஏர் இந்தியா, ஏர் திராஸ்போர்ட் சேவைகள், ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் லிமிடெட், ஏர்லைன் அலைடு சேவைகள் மற்றும் ஏர் இந்தியா என்ஜினீயரிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்
பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ்-2 செல்லலாம் அதிகாரி தகவல்
பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ்-2 செல்லலாம் அதிகாரி தகவல்
பிளஸ்-1 வகுப்புக்கு முதல் முதலாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர்கள் பிளஸ்-2 செல்லலாம் என தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும், பிளஸ்-2 தேர்வும் அரசு பொதுத்தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. பிளஸ்-1 தேர்வு சாதாரண தேர்வாகத்தான் கடந்த ஆண்டு வரை நடத்தப்பட்டு வந்தது.
இதனால் பிளஸ்-1 வகுப்பு பாடங்களை ஆசிரியர்கள் சரிவர நடத்துவதில்லை என்றும், பல தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 பாடம் அறவே நடத்தப்படுவதில்லை என்றும் புகார்கள் வந்தன. ஆனால் நீட் தேர்வில் பிளஸ்-1 வகுப்பில் உள்ள பாடத்தில் இருந்து நிறைய வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.
இதையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கும் 2018 மார்ச் மாதம் முதல் அரசு பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. எனவே இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பிளஸ்-2 வகுப்புக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வில் சில பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள் ஆண்டு விரயமின்றி பிளஸ்-2 வகுப்புக்கு செல்லவும், தோல்வியுற்ற பாடங்களை ஜூன் மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு தேர்விலோ அல்லது பிளஸ்-2 இறுதி ஆண்டு தேர்வின் போதோ எழுதலாம் எனவும் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்தார்.
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குடிமைப் பணி நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குடிமைப் பணி நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குடிமைப் பணி நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி | சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெறவுள்ள குடிமைப்பணி நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணி முதல்நிலை தேர்வை 6 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இவர்களில் 13,365 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். தமிழகத்தில் 810 பேரும், சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் 423 பேரும் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். முதன்மை தேர்வு கடந்த அக்டோபர் 28-ம் தேதி நடைபெற்றது. அத்தேர்வின் முடிவு நேற்று முன்தினம் (ஜனவரி 10) வெளியிடப்பட்டது. இதில் இந்திய அளவில் 2568 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 218 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் அனைத்து பயிற்சி மையங்களிலும் சேர்த்து 171 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வரும் பிப்ரவரி 2-வது வாரத்தில் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சிறந்த வல்லுநர்கள் மூலம் மாதிரி நேர்முகத் தேர்வில் அனைத்து போட்டியாளர்களும் கட்டணமின்றி பங்கேற்கலாம். நேர்முகத் தேர்வு பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் interview@shankarias.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், 9003073321 என்ற செல்போன் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பல்கலை., வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்
குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பல்கலை., வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்
குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பல்கலை., வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் சென்னைப் பல்கலைக்கழகத் தில் நடைபெறவுள்ள குரூப்-4 போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் பல்கலைக்கழகத்தை நேரில் அணுகலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலைக்கழகங்களில் போட்டித் தேர்வுகளுக் கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகமும் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் (பொது) இணைந்து அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முன்ஆயத்த பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகின்றன. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டித் தேர்வில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் எளிதில் வெற்றி பெற வசதியாக இந்தப் போட்டித் தேர்வுக்கான முன்ஆயத்த பயிற்சி வகுப்புகள் நடத்தவுள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் சேர விரும்புவோர் உரிய கல்விச் சான்றுகளுடன் இம்மாதம் 3-வது வாரத்தில் சென்னைப் பல்கலைக்கழக வழிகாட்டும் மைய இயக்குநர் அல்லது சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக நேரங்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பஸ் ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ்
பஸ் ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ்
உடனடியாக பணிக்குத் திரும்ப உயர் நீதிமன்றம் உத்தரவு பஸ் ஊழியர் வேலைநிறுத்தம் வாபஸ் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தைக்கு சமரச தீர்வாளராக ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபன் நியமனம் | உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த 8 நாட்களாக நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. தொழிலாளர்களின் ஊதிய முரண்பாடு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு சமரச தீர்வாளராக ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது
இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உரிய வழிகாட்டுதல் இல்லாததால் தவிக்கும் ஆசிரியர்கள் வினா-வங்கி வெளியிட முடியாத நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம்
இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உரிய வழிகாட்டுதல் இல்லாததால் தவிக்கும் ஆசிரியர்கள் வினா-வங்கி வெளியிட முடியாத நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம்
இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உரிய வழிகாட்டுதல் இல்லாததால் தவிக்கும் ஆசிரியர்கள் வினா-வங்கி வெளியிட முடியாத நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் | பிளஸ் 1 பொதுத்தேர்வை இந்த ஆண்டு மாணவர்கள் எதிர்கொள்ளப் போகும் நிலையில், பாடப்பகுதி வாரியாக இடம்பெறும் வினாக்கள் குறித்த புளு பிரின்ட் இல்லாமல் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது போல் இந்த ஆண்டிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கும் மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து மேல்நிலைக் கல்வியில் தேர்வுமுறை மற்றும் மதிப்பெண் முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பிளஸ் 1 தேர்வுக்கு 600 மதிப்பெண்ணும், பிளஸ் 2 தேர்வுக்கு 600 மதிப்பெண்ணும் என இரண்டு ஆண்டுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் மொத்தம் 1,200 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு வரை மேல்நிலைக் கல்வியில் பிளஸ் 2-வில் மட்டுமே பொதுத்தேர்வு இருந்ததால் தேர்வில் 1,200 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுவரை செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதி வந்த மாணவர்கள் இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும். செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டுக்கு 30 மதிப்பெண். செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கு 200 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதி வந்த மாணவர்கள் ஆண்டுக்கு 90 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும். அக மதிப்பீட்டுக்கு 10 மதிப்பெண். அக மதிப்பீடு அக மதிப்பீட்டில் வருகைப்பதிவு, புராஜெக்ட், களப் பயணம் என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லூரிப் படிப்பின் இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதைப் போன்று பிளஸ் 2 தேர்வு முடிந்ததும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வாக மாற்றப்பட்டதுடன் வினா அமைப்பு, வினாத் தாள் முறை, விடைத்தாள் மதிப்பீட்டு முறை, அக மதிப்பீடு, வருகைப்பதிவு, புராஜெக்ட், களப் பயணம் ஆகியவற்றுக்கு மதிப்பெண் என பல்வேறு புதிய மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. | DOWNLOAD
காவிரி வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
காவிரி வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
காவிரி வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு | காவிரி வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக, கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் சார்பில் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அம்மனுக்கள் மீது தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று, கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, கிரண் மசும்தார் ஷா என்பவரை தலைவராக கொண்ட பெங்களூரு அரசியல் நடவடிக்கை குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- பருவமழை பொய்த்ததால், கர்நாடகாவில் உள்ள அணைகளில் மொத்தம் 28.77 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது. பெங்களூரு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களின் வருடாந்திர குடிநீர் தேவையே 26 டி.எம்.சி. ஆகும். எனவே, தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவிட்டால், கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைவதுடன், பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு போதிய தண்ணீர் கிடைக்காது. இது, அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். ஆகவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு, பெங்களூருவுக்கு போதிய குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:- காவிரி பிரச்சினையில் ஏற்கனவே 20 வருடங்களாக ஏகப்பட்ட குழப்பம் நிலவி வருகிறது. காவிரி வழக்கில் தற்போது நாங்கள் தீர்ப்பை எழுதிக் கொண்டிருக்கிறோம். இன்னும் 4 வாரங்களில் தீர்ப்பு அளிக்கப்படும். தீர்ப்பு வெளியான பிறகு, மனுதாரர் எந்த அமைப்பையும் அணுகட்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு அதிகபட்சம் தலா ரூ.3 ஆயிரம் கிடைக்கும் | அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் தொகையை அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு பொங்கல் போனசாக ரூ.3 ஆயிரத்தை வழங்கி அரசு உத்தரவிடுகிறது. போனஸ் உச்சவரம்பை ரூ.3 ஆயிரமாக கொண்டு இந்த தொகை வழங்கப்படுகிறது. 2016-17-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலான நாட்களில் பணியாற்றிய முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த பணியாளர்கள், சத்துணவுத் திட்ட பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட பணியாளர்கள் (அங்கன்வாடி, குறு அங்கன்வாடி பணியாளர்கள்), கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பஞ்சாயத்து செயலர்கள், ஒப்பந்த பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் வரும் தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் ஆகியோருக்கு சிறப்பு தற்காலிக போனசாக ஆயிரம் ரூபாய் அனு மதிக்கப்படுகிறது. அதுபோல, மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் முன்னாள் கிராம பணியமைப்பு ஊழியர்கள் (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) உள்பட அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள், தற்காலிக ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு பொங்கல் போனசாக ரூ.500 வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் 6 லட்சத்து 86 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு போனஸ் தொகை வழங்குவதற்காக அரசுக்கு கூடுதலாக ரூ.206 கோடி செலவாகிறது
G.o Orders Pongal Festival, 2018 – Grant of Pongal Prize to 'C' and 'D' Group Pensioners / All Family Pensioners - Orders
G.o Orders Pongal Festival, 2018 – Grant of Pongal Prize to 'C' and 'D' Group Pensioners / All Family Pensioners - Orders
708 அரங்குகள், 10 லட்சம் புத்தகங்களுடன் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம் 22-ம் தேதி வரை நடக்கிறது
708 அரங்குகள், 10 லட்சம் புத்தகங்களுடன் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம் 22-ம் தேதி வரை நடக்கிறது | தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 41-வது புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது. இந்த புத்தகக் காட்சி 22-ம் தேதி வரை நடக்கிறது. பபாசி அமைப்பு கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் பிரம்மாண்டமான புத்தகக் காட்சியை நடத்தி வருகிறது. இந்தாண்டு 41-வது புத்தகக் காட்சி கீழ்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இன்று தொடங்குகிறது. இந்த புத்தகக் காட்சி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து பபாசி தலைவர் வயிரவன், செயலர் ஏ.ஆர்.வெங்கடாசலம், பொருளாளர் டி.எஸ். சீனிவாசன் ஆகியோர் கூறிய தாவது: சுமார் 1.60 லட்சம் சதுர அடி பரப்பளவில் 708 அரங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள புத்தகக் காட்சியை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 10-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி, எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்த கக் காட்சி நடைபெறும்.
10 சதவீத தள்ளுபடி புத்தகக் காட்சியில் புத்தகங்களுக்கு 10 சதவீத கழிவு வழங்கப்படும். நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு குறைவான குழந்தை களுக்கு அனுமதி இலவசம். புத்தகக் காட்சி நடக்கும் பள்ளி வளாகத்தில் கார்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் வாகனங்கள் வந்தால் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் அவற்றை நிறுத்தலாம்.
புத்தகக் காட்சி வளாகத்தில் பணம் பெற 2 ஏடிஎம் இயந்திரங் களும், பணம் செலுத்த 15 இடங்களில் டெபிட், கிரெடிட் கார்டு ஸ்வைப்பிங் செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
வாசகர்கள் பயன்படுத்தும் வித மாக இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை புத்தகக் காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் பல்வேறு துறை நிபுணர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், மாணவர் களுக்கான போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாசகர்கள் - எழுத்தாளர்கள் சந்திப்புக்காக தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தகக் காட்சி அரங்கில் வாசகர்களைக் கவரும் வண்ணம் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் திறந்து வைக்கிறார். இளம் குறும்பட, ஆவணப்பட இயக்குநர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றை திரையிட புத்தகக் காட்சி வளாகத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது., பாரம்பரிய இசையைப் போற் றும் வகையில் இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. புத்தகக் காட்சி நிறைவு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்துகொண்டு பதிப் புத் துறையில் 25 ஆண்டு கள் சேவை செய்தவர்களுக்கு விருது வழங்குகிறார். ரோபோ அறிமுகம் முதன்முறையாக இந்தாண்டு எந்த அரங்கில் எந்த புத்தகம் உள்ளது என்பதை ரோபோ மூலம் அறிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தாங்கள் விரும்பும் புத்தகம் உள்ள அரங்கை தேடி அலைய வேண்டியதில்லை. அந்த ரோபோவை பார்த்து அரங்குக்கு நேரடியாகப் போய் புத்தகம் வாங்கிக் கொண்டு நேரத்தை மிச்சப்படுத்தலாம். புத்தகக் காட்சி குறித்த கூடுதல் விவரங்களை www.bapasi.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றனர்.
கார்டோசாட்-2’ உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்பாடுகள் தீவிரம்
கார்டோசாட்-2’ உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்பாடுகள் தீவிரம்
கார்டோசாட்-2' உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்பாடுகள் தீவிரம் | 'கார்டோசாட்-2' உட்பட 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட், இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா வேகமான வளர்ச்சி கண்டுவருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் மூலம் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்து வருகிறது.
உள்நாட்டு செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் வணிகரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது. தற்போது புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான 'கார்டோசாட்-2' உட்பட 31 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் மூலம் இன்று செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து 12-ம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் சுமந்து செல்ல உள்ள 31 செயற்கைக்கோள்களில் ஒரு மைக்ரோ, ஒரு நானோ மற்றும் ஒரு 'கார்டோசாட்-2' என்ற 3 செயற்கைக்கோள்கள் மட்டுமே இந்தியாவுக்கு சொந்தமானவை. மீதமுள்ள 28 செயற்கைக்கோள்கள் (3 மைக்ரோ, 25 நானோ) அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா ஆகிய 6 நாடுகளில் இருந்து வணிகரீதியாக நம்முடைய ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளன. கார்டோசாட்-2 விண்ணில் செலுத்தப்பட உள்ள 31 செயற்கைக்கோள்களில் மிக முக்கியமானது 'கார்டோசாட்-2'. அதிநவீன சென்சார் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த செயற்கைக்கோள், புவியின் மேற்பரப்பை மிக துல்லியமாக படமெடுக்கும் திறன் கொண்டது. இதற்காக பிரத்யேக கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் வரைப்பட தயாரிப்பு, நில அளவீடு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் புவியின் கீழ் வட்டப் பாதையில் சுற்றி வரும்.
வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
`வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரலாம்` | வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் பட்ஜெட் அறிவிப்பு நடுத்தர வருமான பிரிவினருக்கு சாதகமாக இருக்கும் என்று நிதியமைச்சகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, வருகிற பட்ஜெட் அறிவிப்பில் தனிநபர் வருமான உச்ச வரம்பில் மாற்றங்கள் இருக்கலாம். குறிப்பாக தனிநபர் வருமான வரி விலக்கு தற்போது ரூ.2.50 லட்சம் என்கிற நிலையிலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ரூ.5 லட்சம் வரை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த குறைந்தபட்ச விலக்கு நடுத்தர வருமான பிரிவினருக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும். குறிப்பாக மாதச் சம்பளதாரர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். இந்த நடவடிக்கை சில்லரை பணவீக்கத்தில் உருவாகும் ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்தவும் உதவும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் நிதியமைச்சர் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருந்தால் அதற் கான 10 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைத்திருந்தார். இந்த நிலையில் வரும் பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு குறைந்தபட்ச வரியாக 10 சதவீத வரி விதிக்கவும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.20 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரி விதிக்கவும் வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். -பிடிஐ
ஞாயிறு, 7 ஜனவரி, 2018
கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு.விண்ணப்பிக்க 9-2-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்
கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு.விண்ணப்பிக்க 9-2-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு | முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஏற்படும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் டேன்செட் (TNSET) எனப்படும் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகம் மூலமாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 2018-ம் ஆண்டுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. 4-3-2018 அன்று இதற்கான தேர்வு நடத்தப் படுகிறது. மொத்தம் 26 பாடத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடக்க உள்ளது. 11 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
கல்வித்தகுதி: வேதி அறிவியல், வணிகம், கணினி அறிவியல் மற்றும் அப்ளிகேசன், பொருளாதாரம், கல்வி, எலக்ட்ரானிக்ஸ், ஆங்கிலம், ஜியோ கிராபி, இந்தி, வரலாறு, ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேசன், சட்டம், சான்ஸ்கிரிட், நிர்வாகவியல், தமிழ், தெலுங்கு, சமூகவியல், உளவியல், அரசியல் அறிவியல், உடற்கல்வி அறிவியல், நூலக அறிவியல், புவி அறிவியல் உள்ளிட்ட 26 பாடத்துறைகளில் முதுநிலைப்படிப்பு அல்லது முதுநிலை படிப்புடன் பிஎச்.டி. ஆய்வுப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் : இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.500 கட்டணமும், ஓ.பி.சி. நான் கிரீமிலேயர் பிரிவினர் ரூ.1250-ம் கட்டணமும் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் சென்று முழுமையான விவரங்கள் படித்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கத் தொடங்கவும். தேவையான இடத்தில் புகைப்படம் மற்றும் கையொப்பம் மற்றும் அவசியமான சான்றுகள் நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 9-2-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரத்தை www.tnsetexam2018mtwu.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விமான நிறுவனத்தில் பணியிடங்கள்
விமான நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியிடங்கள்
விமான நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியிடங்கள் | இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.) நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும், விமானப்படைக் குத் தேவையான விமான வடிவமைப்பு, உபகரணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனம் கவனிக்கிறது.
தற்போது இந்த நிறுவனத்தின் கோராபுட் கிளையில் தொழில்நுட்ப ஆபரேட்டர், பாராமெடிக்கல் ஸ்டாப் உள்ளிட்ட பணிகளுக்கு 70 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டிங், வெல்டிங், கிரைண்டர், டர்னர், மோல்டர், மில்லிங் போன்ற பிரிவில் ஆபரேட்டர் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 15-12-2017-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு உண்டு. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், இளநிலை அளவியல் படிப்புடன், ஆபரேசன் தியேட்டர் டெக்னாலஜி, டென்டரில் சர்ஜரி டிப்ளமோ படித்தவர்கள் பாராமெடிக்கல் ஸ்டாப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம், www.halindia.com என்ற இணைய தளத்தில் விரிவான விவரங்களைப் பார்த்துவிட்டு 8-1-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் தவறுகள் நிகழாத வண்ணம் திருத்தும் பணியில் அனுபவமிக்க ஆசிரியர்கள்சி பிஎஸ்இ புதிய நடவடிக்கை
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் தவறுகள் நிகழாத வண்ணம் திருத்தும் பணியில் அனுபவமிக்க ஆசிரியர்கள்சி பிஎஸ்இ புதிய நடவடிக்கை | சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் சிறுதவறு கூட ஏற்படாத வண்ணம் இருக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன்படி, விடைத்தாள் திருத்தும் பணியில் பயிற்சியும், அனுபவமும் மிக்க ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த சிபிஎஸ்இ முடிவுசெய்துள்ளது. சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை உரிய நேரத்தில் வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவுகிறது.
இதுவரை 10-ம் வகுப்பு தேர்வை மாணவர்கள் விரும்பி னால் பொதுத்தேர்வாகவும் இல்லாவிட்டால் பள்ளி அளவிலான தேர்வாகவும் எழுதிக்கொள்ளலாம். அடுத்த ஆண்டு முதல் முன்பு இருந்து வந்ததைப் போன்று 10-ம் வகுப்பும் தேர்வு பொதுத்தேர்வாக மட்டுமே நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில், 2018-ம் ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் நடத்தி, உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ முடிவுசெய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக விடைத்தாள் மதிப்பீட்டில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. வழக்கமாக பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு தேவையான ஆசிரியர்களை அனுப்புமாறு பள்ளி நிர்வாகங்களை சிபிஎஸ்இ கேட்டுக்கொள்ளும். ஆனால், இந்த விஷயத்தில் பள்ளிகள் மெத்தனமாக இருப்பதாகவும், பயிற்சியும் அனுபவ மும் வாய்ந்த ஆசிரியர்களை அனுப்புவதில்லை என்றும் சிபிஎஸ்இ கண்டறிந்தது. இதன் காரணமாக, விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் காலதாமதம் ஏற்பட்டு அதன்விளைவாக உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத சூழல் ஏற்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, 2018-ம் பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளைப் பயிற்சியும், அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மட்டுமே நிறைவேற்ற சிபிஎஸ்இ முடிவுசெய்துள்ளது.
இதற்காக, பயிற்சியும் அனுபவமும் மிக்க ஆசிரியர்களின் விவரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பைத் தயாரித்து அனுப்புமாறு அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வாறு பெறப்படும் தகவல் தொகுப்பில் இருந்து தகுதியான ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களை மட்டும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் முழு கவனத்துடன் ஈடுபடும் வகையில் அவர்களுக்கு விடைத்தாள் மதிப்பீட்டு நாட்களில் வேறு எந்தவிதமான கற்பித்தல் பணிகளையும் அளிக்கக்கூடாது என்றும் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன
போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சி மையம் தொடக்கம்
போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சி மையம் தொடக்கம்
போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான அரசு இலவச பயிற்சி மையம் தொடக்கம் | ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மையத்தை தமிழக அரசு யில் தொடங்கியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயா கல்லூரி வளாகத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி மைய தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில், பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகளை வழங்கி மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது: ரயில்வே பணியாளர் வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம், மத்திய வங்கி பணியாளர்களுக்கான தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.1.53 கோடி செலவில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கவுள்ளது. 3 மாதங்களுக்கு 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுவார்கள். பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 மதிப்பிலான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
708 அரங்குகள் அமைப்பு: சென்னை புத்தக கண்காட்சி 10-ந்தேதி தொடக்கம்
708 அரங்குகள் அமைப்பு: சென்னை புத்தக கண்காட்சி 10-ந்தேதி தொடக்கம்
708 அரங்குகள் அமைப்பு: சென்னை புத்தக கண்காட்சி 10-ந்தேதி தொடக்கம் 41-வது சென்னை புத்தக கண்காட்சியில் வாசகர்களுக்கு வழிகாட்டும் 'ரோபோ'வுடன் 'பபாசி' தலைவர் எஸ்.வைரவன் உள்பட நிர்வாகிகள் உள்ளனர். | 41-வது சென்னை புத்தக கண்காட்சி வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில் 10 ஆயிரம் புதிய தலைப்பிலான புத்தகங்கள் இடம் பெறுகின்றன.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்(பபாசி) தலைவர் எஸ். வைரவன், செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாசலம், பொருளாளர் டி.எஸ்.சீனிவாசன், துணை தலைவர்கள் பி.மயிலவேலன், ஏ.ஆர்.சிவராமன், செயலாளர் ஏ.ஆர்.வெங்கடாச்சலம் ஆகியோர் கூட்டாக சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
வாசகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 41-வது சென்னை புத்தக கண்காட்சி வருகிற 10-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. இதற்காக சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 708 புத்தக அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
இதில் தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டி மீடியா 22, பொது அரங்குகள் 24 அடங்கும். 376 பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் 236 தமிழ் பதிப்பாளர்களும், 102 ஆங்கில பதிப்பாளர்களும், 14 மல்டி மீடியா பதிப்பாளர்களும், 24 பொது பதிப்பாளர்களும் அடங்குவர். வாசகர்கள், எழுத்தாளர்கள் சந்திப்புக்கு தனி அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் தலைப்பிலான புதிய புத்தகங்கள் இந்த ஆண்டு கண்காட்சியில் இடம் பெறுகின்றன. புத்தக கண்காட்சி தொடக்க விழா 10-ந்தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு பபாசியின் புரவலரும், தொழில் அதிபருமான நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்குகிறார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கிவைக்கிறார். மேலும் சிறந்த பதிப்பாளர், விற்பனையாளர், எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். புத்தக கண்காட்சியை பிரபலப்படுத்தும் வகையில் 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் 'சென்னை வாசிக்கிறது' என்ற நிகழ்ச்சி புத்தக கண்காட்சி நடைபெறும் அரங்கில் 8-ந்தேதி நடக்கிறது.
வாசகர்களை கவரும் வண்ணம் பிரமாண்ட திருவள்ளுவர் சிலை புத்தக கண்காட்சி வளாகத்தில் நிறுவப்பட உள்ளது. சிலை திறப்பு விழா 11-ந்தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முனைவர் கோ.விஜயராகவன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். பெண்களை போற்றும் விதமாக 12-ந்தேதி பெண்கள் தினமாக புத்தக கண்காட்சியில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெ.இறையன்பு, எம்.ராஜாராம், என்.சுப்பையன், ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.திருநாவுக்கரசு, பேச்சாளர்கள் பழ.கருப்பையா, கு.ஞான சம்பந்தன், சுகி சிவம் பாரதி பாஸ்கர், திரைப்பட நடிகர் சமுத்திரகனி உள்பட பல்வேறு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. புத்தக கண்காட்சி நிறைவு விழா 22-ந் தேதி (திங்கட் கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவுக்கு, மெட்ரிகுலேஷன் பள்ளி கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் தலைமை தாங்குகிறார்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி பேசுகிறார். எஸ்.எம்.சில்க்ஸ் நிறுவனர் எல்.மனோகரன் வாழ்த்துரை வழங்குகிறார். 41-வது புத்தக கண்காட்சி மாணவர்களை மையப்படுத்தி நடக்கிறது. அதன்படி 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச அனுமதி நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அனுமதி இலவசம். 12 வயதை கடந்தவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி செயல்படும். கண்காட்சிக்கு வருபவர்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவ வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலவசமாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சோதனை, ஆதார் கார்டு சேவை போன்றவற்றிற்கும் தனியாக அரங்குகள் உள்ளன. கார்கள் நிறுத்துவதற்கு ரூ.30-ம், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு 10 லட்சம் பேர் வந்தனர். இந்த ஆண்டு 15 லட்சம் பேர் வருவார்கள் என்று நம்புகிறோம். இதன் மூலம் ரூ.13 கோடி வருவாய் கிடைக் கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நம்மோடு உரையாடி நாம் கூறும் பணிகளை செய்திடும்-கூகுள் ஹோம்
நம்மோடு உரையாடி நாம் கூறும் பணிகளை செய்திடும்-கூகுள் ஹோம்
நம்மோடு உரையாடி நாம் கூறும் பணிகளை செய்திடும்-கூகுள் ஹோம் | இன்றைய நாளில் பலதரப்பட்ட பணிகளை ஒரே நேரத்தில் அவசரமாக செய்யவேண்டிய சூழல் உள்ளது. சிலர் உடல்நிலை காரணமாக சில பணிகளை செய்யமுடியாதபடியும் இருக்கும். அது போல நாம் தனிமையில் இருக்க நேரிடும் போது பேச்சு துணையின்றி கஷ்டபடுவோம். இவை அனைத்திற்கும் விடைகாணும் விதமாய் நமக்கு உதவிபுரியும் நோக்கில் இயந்திர உதவியாய் வந்துள்ளார்.
இவர் ரோபோ அல்ல. ஆனால் எல்லா பணிகளையும் இருந்த இடத்தில் இருந்து ஆணையிட உடனே அப்பணியை செய்து முடித்து விடுகிறது. என்னடா அதிகமாக ஆர்வத்தை துண்டுகிறார் என நினைத்து விட வேண்டாம். இப்படி ஓர் துணையாளர், உதவியாளர் என வியக்கும் அளவு கூகுள் ஹோம் வந்துள்ளது. பல வியத்தகு தொழில்நுட்ப கருவிகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கிட்ட கூகுள் நிறுவன வெளியீடு தான் கூகுள் ஹோம். அன்றாட பணிகளை சுலபமாக்கும் கூகுள் ஹோம் என்பது பேச்சு மூலம் இயங்கக்கூடிய ஸ்பீக்கர் இணைப்புடன், சக்தி வாய்ந்த கூகுள் அஸிஸ்டெண்ட் துணையுடன் இயங்குகிறது. நமது பேச்சு மூலம் சொல்லும் கட்டளைகளை உடனடியாக செயல்படுத்தி தருகிறது. கூகுள் ஹோம் துணையுடன் அனைத்து இயந்திரம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் செயல்களை இயக்கி மற்றும் கன்ட்ரோல் செய்ய முடியும். நம்முடைய கேள்விகளுக்கு பதில் கூறும் கூகுள்-ஹோம் கூகுள்-ஹோம் என்பதை பக்கத்தில் வைத்து கொண்டு எந்த வித உதவிகளையும் கேட்க முடியும். நமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் நாம் கேட்கும் மொழியிலேயே வழங்குகிறது. அதாவது செய்திகள், பருவநிலை தகவல்கள், நேரம், விளையாட்டு என்பதுடன் ஒவ்வொரு நகர பகுதிகளிலும் உள்ள வியாபார ஸ்தலங்கள் குறித்த தகவல்கள், திறந்திருக்கும் நேரம், விடுமுறை நாள் என்றவாறு எந்தவித தகவல்களை உடனடியாக பதிலாக அளித்து விடும்.
இசைபாடல்களை கேட்க உதவும் கூகுள் ஹோம் நாம் எந்த வித தொடுதலுமின்றி அமர்ந்தபடி எனக்கு இந்த பாடல் வேண்டும் என்று கூறினால் போதும் உடனடியாக அந்த பாட்டு ஒலிக்க தூண்டும் இதில் சூப்பர் பவர் ஸ்பீக்கர் மூலம் அதிக ஒலி சத்தத்துடன், துல்லியமான வெளிபாடு கொண்ட பாடல்களை கேட்டிட முடியும். வீட்டின் அனைத்து மின்னணு சாதனங்களுடன் இணைக்கக்கூடிய கூகுள் ஹோம் வீட்டிலுள்ள ஸ்மார்ட் மின்னணு சாதனங்களான விளக்குகள், தொலைகாட்சி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், வாட்டர் ஹீட்டர், எலட்ரிக் குக்கர், ஸ்மார்ட் விளக்குகள் என்றவாறு 1000-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் இயந்திரங்கள் என்றவாறு 150-க்கும் மேற்பட்ட சிறப்புமிகு பிராண்ட் பொருட்களுடன் இணைந்து செயல்படகூடியது கூகுள் ஹோம். நாம் அமர்ந்த இடத்திலிருந்து வாட்டர் ஹீட்டர் இவ்வளவு வெப்பநிலையில் தண்ணீர் சூடாக வேண்டுமென்பது முதல் எலக்டிரிக் கெட்டில் டீ தயார் செய்வது, விளக்குகள் எரிய வைப்பது, வாஷிங்மெஷினை இயக்குவது என்றவாறு பல பணிகளை நமது பேச்சுமூலமே இயக்கிட முடியும். இதிலுள்ள க்ரோம்காஸ்ட் மூலம் தொலைகாட்சி நிகழ்வுகளை நிறுத்துவது, முன் இயக்கம் மற்றும் பின் இயக்கம் என்பதனை நமது விரல் படாமலேயே மேற்கொள்ள முடியும்.
அது போல் எனக்கு நெட்பிளக்ஸ் போன்ற ஆன்லைன் திரைப்படங்களுக்கான ஆப்ஸ்-லிருந்து இந்த படம் ஒளிப்பரப்ப வேண்டும் என கூறினால் போதும் உடனே அப்படம் காட்சிபடுத்தப்படும். பொழுது போக்குடன் விளையாடவும் செய்யும் கூகுள் ஹோம் நம்முடன் எதிர் அமர்ந்து ஓர் மனிதரைப்போல் விளையாடலாம். புதிய விஷயங்களை நம்முடன் பகிரவும், கதைகள் போன்றவற்றை சொல்லவும் கூகுள் ஹோம் உதவுகிறது. குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகள் கூறும், பாட்டுக்கள் பாடும் நாம் எவருக்கும் பேச வேண்டும் எனில் உடனே மொபைலை தொடமலே அவருடன் இணைப்பை ஏற்படுத்தி தரும். அனைவருக்கும் உற்ற துணையாகவும், உதவியாளனாய் கூகுள் ஹோம் உள்ளது.
ஸ்மார்ட் போனில் நுழைய காத்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்
ஸ்மார்ட் போனில் நுழைய காத்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்
ஸ்மார்ட் போனில் நுழைய காத்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் | ஸ்மார்ட் போன்களின் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இமாலய அளவில் உள்ளது. இது ஆண்டுக்காண்டு ஒரு உன்னத நிலையை எட்டி பிடித்து ஸ்மார்ட் போன்கள் மீதான மக்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன. ஸ்மார்ட்போன்கள் பேசுவதற்கும், சமூக தளங்களில் இயங்குவதற்கு என்பது மட்டுமல்லாது சிறு நிறுவனங்களின் வளர்ச்சி, பாதுகாப்பு அம்சங்கள், ஆப்ஸ்களின் மூலமான பெரும் வளர்ச்சி, சிறப்புமிகு இடந்தேடல் என பல முன்னேற்ற அம்சங்களை கொண்டு மக்களுடன் இணைந்த நபராய் உள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அடுத்த கட்டம் நோக்கி பயணிக்கிறது. ஆம் அடுத்த ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட போகும் சில மாற்றங்களை ஆராயும்போது அதன்மீது அதிக ஆர்வமும், கூடுதல் கவன ஈர்ப்பும் ஏற்படுகிறது. மின்னணு அதிர்வலை தொழில்நுட்பத்தின் மூலமாக தொடுதிரை அனுபவம் என்பது முற்றிலுமாக மாறுபடும். நாம் எதனை எண்ணி கொண்டு ஸ்மார்ட்போனை தொடுகிறோமோ அது அங்கே காட்சியாக விரியும். ஆம் ஷாப்பிங் செய்ய வேண்டும் என நினைத்தால் ஷாப்பிங் இணையதள முகவரிகள் மற்றும் நிறுவனங்கள் பகுதி செல்லும். அதுபோல் நாம் என்ன பொருள் ஆடையா, காலணியா, ஸ்மார்ட்போனா என்று எதை நினைத்து தொடுகிறோமோ அதற்கு ஏற்ப செயல்படும். நாம் நினைத்து செயல்பட்டு தொடுதிரை ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் முன் மின்னணு அதிர்வலை வாயிலாக நாம் தொடும்போது எலக்ட்ரோ ஸ்டிக் அதிர்வுகள் மூளைக்குள் பாய்ந்து நமது எண்ணங்களை வாங்கி உடனடியாக ஸ்மார்ட் போனுக்கு தகவல்களை தருகிறது.
எலக்ட்ரோ வைப்ரேஷன் தொழில்நுட்பம் குறித்து டிஸ்னி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள ஏற்கனவே பலவித ஆய்வுகள் மேற்கொண்டு அதனை செயல்படுத்த பல அமைப்புகளை அமைத்துள்ளன. அதுபோல் ஆப்பிள் நிறுவனம் எலக்ட்ரோ வைப்ரேஷன் தொழில்நுட்பம் குறித்தான சில உரிமங்களையும் பதிவு செய்து உள்ளன. ஸ்பீச்-டூ-ஸ்பீச் என்பது 2012-ல் மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய போதும் தற்போது தான் பன்மொழி கான்ப்ரன்ஸ் கால்கள் என்பது வணிக ரீதியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இது இன்னும் முன்னேற்றம் பெற்று பல நாட்டு மக்களும் முக்கியமான விஷயங்களை எந்தவொரு மொழி பெயர்ப்பான் மற்றும் மீடியேட்டர் உதவியின்றி தங்களது மொழியில் விஷயங்களை அறிய இது உதவிகரமாக இருக்கும். நெகிழ் தன்மையுடன் மற்றும் உபயோகத்திற்கு தேவையான அளவில் மாற்றம் செய்யக்கூடிய ஸ்மார்ட்போன்கள். அதாவது மடித்து இயக்க கூடியவாறும், சுருக்க திலையில் சிறியதாக மாற்றி பின் பெரிய அளவில் விரிய செய்யக் கூடிய ஸ்மார்ட்போன்கள் வரபோகின்றன. OLED எனும் தொழில்நுட்பம் வாயிலாக ஸ்மார்ட்போன் காட்சி திரைகளை சுருட்டலாம். மடக்கலாம், சுருக்கலாம். எனவே வேண்டும்போது பெரிய காட்சி தரையில் படம் பார்ப்பது. பிறகு மடித்து சிறியதாக வைத்து கொள்வது.
அதுபோல் இருபக்க காட்சி திரை கொண்ட செயல்பாடு. நாம் நமக்கு பிடித்ததை பார்க்க மறுபுறம் நமது நண்பர் பிற தேடல்களை நிகழ்த்தும் வகையிலான வசதியமைப்பு. ஏற்கனவே ஸ்மார்ட் வளர்ச்சிகளின் வளைய கூடிய அமைப்பு திறம்பட இயங்கிட அடுத்து ஸ்மார்ட் போன்களின் உருவ ரீதியிலான நெகிழ்வும் கைகூட போகிறது. பலதரப்பட்ட பணிகளை ஸ்மார்ட் போனில் செய்ய வேண்டி இருப்பதால் உடனுக்குடன் பேட்டரி சார்ஜ் போய்விடுகிறது. இதற்கான பிரத்யேகமான அல்ட்ரா-ராபீட் சார்ஜர் வரபோகிறது. இதன் மூலம் 30 செகண்டில் முழு பேட்டரியும் சார்ஜ் செய்யப்பட்டு விடும். இவை அனைத்தும் கூடிய விரைவில் ஸ்மார்ட்போன் உலகின் தொழில்நுட்ப வசதிகளாய் நுழைய போகின்றன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடக்கிறது மத்திய பட்ஜெட் 1-ந்தேதி தாக்கல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடக்கிறது மத்திய பட்ஜெட் 1-ந்தேதி தாக்கல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடக்கிறது மத்திய பட்ஜெட் 1-ந்தேதி தாக்கல் | நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை இரு கட்டங்களாக நடக்கிறது. பிப்ரவரி மாதம் 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது. நேற்று இத்தொடர் முடிந்தது.
இதையடுத்து நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறவேண்டும். 70 ஆண்டுகளுக்கும் மேலாக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் தொடங்குவதுதான் வாடிக்கையாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முதல் முறையாக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதை ஜனவரி மாத இறுதிக்கு மாற்றியது. இந்த ஆண்டு 2-வது முறையாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாத இறுதியில் தொடங்கப்படுகிறது. குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் இதுபற்றி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி அனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட பின்பு, பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்குவது குறித்து மத்திய உள்துறை ராஜ்நாத்சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி சபை குழு கூடி ஆலோசனை நடத்தியது. அதில் பட்ஜெட் கூட்டத்தொடரை வருகிற 29-ந்தேதி தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறும். ஜனவரி 29-ந்தேதி தொடங்கும் முதல் கட்டத்தொடர் பிப்ரவரி 9-ந்தேதி முடிவடையும். நிதி மந்திரி 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்வார். ஜனாதிபதி உரை 2-ம் கட்ட கூட்டத் தொடர் மார்ச் 5-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடக்கும். பிப்ரவரி 10-ந்தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரை நாடாளுமன்றத்துக்கு விடுமுறை ஆகும். வருடத்தின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் வருகிற 29-ந்தேதி உரையாற்றுவார். அதே நாளில் பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். பட்ஜெட் கூட்டத் தொடரின்போது முத்தலாக் சட்ட மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிர ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்ச்சி பெறாத முன்னாள் மாணவர்கள் பாலிடெக்னிக் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு
தேர்ச்சி பெறாத முன்னாள் மாணவர்கள் பாலிடெக்னிக் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு
தேர்ச்சி பெறாத முன்னாள் மாணவர்கள் பாலிடெக்னிக் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு | பாலிடெக்னிக் தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு கருணை அடிப்படையில் தொழில்நுட்ப கல்வித்துறை கீழ் வருகிற ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாத பட்டயத்தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2010 வரை முழு நேர 3 வருடம், 3½ வருடம் மற்றும் 2009 வரை 4 வருட பகுதி நேர பட்டயப்படிப்பில் சேர்ந்த அனைவரும் இத்திட்டத்தின்படி தேர்வு எழுதலாம். தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.500 தேர்வு கட்டணமாகவும் ரூ.30 மதிப்பெண் பட்டியல் கட்டணமாகவும், ரூ.25 பதிவு கட்டணமாகவும் தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வர் மூலமாக செலுத்த வேண்டும். அபராதம் இன்றி செலுத்த கடைசி நாள் பிப்ரவரி 7-ந் தேதியும், ரூ.100 அபராதத்துடன் செலுத்த கடைசி நாள் 14-ந் தேதியும், தட்கல் முறையில் ரூ.500 அபராதத்துடன் செலுத்த கடைசி நாள் மார்ச் 9-ந் தேதியும் ஆகும். இத்தகவலை தொழில்நுட்ப கல்வி ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்களை Online இல் பதிவு செய்ய தேவையான விவரங்கள்
தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்களை Online இல் பதிவு செய்ய தேவையான விவரங்கள்
பதிவு செய்ய இணையதள முகவரி CLICK HERE
6,029 பள்ளிகளில் 'ஹைடெக்' ஆய்வகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
6,029 பள்ளிகளில் 'ஹைடெக்' ஆய்வகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
சென்னை: ''மாநிலம் முழுவதும், 6,029 அரசு பள்ளிகளில், 429 கோடி ரூபாய் செலவில், உயர்தர கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை காட்டிலும் சிறப்பாக இருக்கும். மாநிலம் முழுவதும், 3,000 அரசு பள்ளிகளில், 60 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படும். பள்ளிகளில் கட்டமைப்பு மேம்படுத்த, மத்திய அரசிடம், 500 கோடி ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளோம். புதிய பாடத்திட்டத்தில், 72 தொழிற்கல்வி பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும். கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, தனியார் நிறுவனத்தின் ஐந்து கோடி ரூபாய் பங்களிப்புடன், சிறப்பு பயிற்சிகள் தர உள்ளோம். மேலும், 6,029 பள்ளிகளில், 429 கோடி ரூபாய் செலவில், உயர்தர, 'ஹைடெக்' கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களில், போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறுவோருக்கு, ஒரு லட்சம் லேப்டாப்கள், பொது தேர்வுக்கு முன்பே வழங்கப்பட உள்ளன. தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்விக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும். மத்திய அரசிடமிருந்து, 2,200 கோடி ரூபாய், தமிழகத்துக்கு வரவேண்டி உள்ளது; அதை பெற முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
வடமாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில், 2013 முதல் தேர்ச்சி பெற்றவர்கள், 92 ஆயிரத்து, 620 பேர் உள்ளனர். அவர்கள் தேர்ச்சி பெற்றது முதல், ஏழு ஆண்டுகள், அதாவது, 2020 வரை அரசு பணியில் சேர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நான்கு மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியையின் பணியிடை நீக்கம் ரத்து !
நான்கு மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியையின் பணியிடை நீக்கம் ரத்து !
வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நான்கு மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பணியிடை நீக்கம்
செய்யப்பட்ட தலைமை ஆசிரியை மற்றும் முதுகலை ஆசிரியை ஆகியோரின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு தலைமை ஆசிரியைக்கு திருவலம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளிக்கும் முதுகலை ஆசிரியைக்கு திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு அரசு மேனிலைப் பள்ளிக்கும் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல காட்டுப்பாக்கம் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரின் பணியிடை நீக்கமும் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அதே பள்ளிக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர், வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் அவர்களுக்கும் வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் சங்கங்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
EMIS பள்ளி மாணவர்கள் சுயவிபரங்கள் திருட்டா?
EMIS பள்ளி மாணவர்கள் சுயவிபரங்கள் திருட்டா?
' EMIS ' என்ற, கல்வி தகவல் மேலாண்மை திட்டத்தின் தகவல்கள், ஆறு ஆண்டுகளாக, அவ்வப்போது மாயமாகி வருகின்றன. அதனால், தகவல்கள் திருடப்படுகிறதா என, விசாரணை துவங்கியுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க, எமிஸ் திட்டம், 2011ல் அறிவிக்கப் பட்டது. இதுதொடர்பாக, 'எமிஸ்' இணையதளம் துவங்கப்பட்டு, விபரங்களை பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.
மாணவர்களின் எண்ணிக்கை, பெயர், வகுப்பு, ரத்த பிரிவு, முகவரி, 'ஆதார்' எண், மொபைல் போன் எண் போன்ற விபரங்களை பதிவேற்றம் செய்ய, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பள்ளிகளும், ஆறு ஆண்டுகளாக சில ஆசிரியர்களை நியமித்து, இந்த பணிகளை மேற்கொள்கின்றன. ஆனால், அனைத்து தகவல்களும் அவ்வப்போது மாயமாவதும், அதை மீண்டும் பதிவேற்றம் செய்ய சொல்வதும் தொடர் கதையாக உள்ளது. எமிஸ் தகவல்களை, இணையதளத்தில் இருந்து யாரும் திருடுகின்றனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னையால், அண்ணா பல்கலை தொழில்நுட்ப உதவியால் செயல்பட்ட, எமிஸ் இணையதளம், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின், நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. சமீபத்தில், 'ஆண்ட்ராய்டு' செயலியும் கொண்டு வரப்பட்டது. அதிலும் குழப்பம் ஏற்பட்டு, இரண்டாவது செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது, மீண்டும் முதலில் இருந்து, தகவல்களை பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனால், பாடங்களை நடத்துவதா, விபரங்களை பதிவேற்றுவதா என, பள்ளிகள் தவிக்கின்றன. பள்ளிக் கல்வித்துறை, ஏற்கனவே சேகரித்த விபரங் களை மீண்டும் மீண்டும் கேட்டு, ஆசிரியர்களை தொல்லை செய்வதை விட்டு, நல்ல தொழில்நுட்ப நிறுவனத்திடம், இந்த பணியை ஒப்படைக்கலாம் என, ஆசிரியர்களும், கல்வியாளர்களும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகளை தரம் உயர்த்த 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் உதவி
அரசு பள்ளிகளை தரம் உயர்த்த 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் உதவி
அரசு பள்ளிகளின் கட்டமைப்புக்களை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.'கார்ப்பரேட்' என்ற, பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசுத் துறையினர் பங்கேற்ற கருத்தரங்கம், சென்னையில், நேற்று நடந்தது.
இதில், தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் பேசுகையில், ''கார்ப்பரேட் நிறுவனங்கள், மற்ற துறைகளில் செலவிடுவதை போல, சமூக பங்களிப்பு நிதியில், அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவ வேண்டும்,'' என்றார்.
பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களின் நிதியை நேரடியாக எங்களிடம் தர வேண்டாம். அரசு பள்ளிகளில், என்ன தேவை உள்ளது என்ற, விபரம் தருகிறோம். அதன்படி, பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் பணிகளை, நீங்களே மேற்கொள்ளுங்கள். உங்கள் நிறுவன பெயரையும் பதிவு செய்யலாம்.
கல்வித்துறைக்கு உதவும் நிறுவனங்களுக்கு, முதல்வர் தலைமையில் விழா நடத்தி, பாராட்டு சான்றிதழ் வழங்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.
சி.ஐ.ஐ., என்ற, இந்திய தொழில் கூட்டமைப்பின், தமிழக துணை தலைவர், பொன்னுசாமி, பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், இயக்குனர்கள், நந்தகுமார், இளங்கோவன், கருப்பசாமி, ராமேஸ்வர முருகன் பங்கேற்றனர்.
சி.ஐ.ஐ., துணை தலைவர், பொன்னுசாமி கூறியதாவது:'கார்ப்பரேட்' நிறுவனங்கள், தங்களின் லாபத்தில், ௨ சதவீதத்தை, சமூக பங்களிப்பு நிதிக்கு செலவிட வேண்டும்.
அந்த நிதியில், ஏரிகள் சீரமைப்பு, குளங்கள் துார்வாருவது, வெள்ள சீரமைப்பு பணிகள் என, பல வகையில் செலவிடுகிறோம். தற்போது, பள்ளிகளின் தரம் உயர்த்தும் பணிகளிலும் ஈடுபட உள்ளோம்.
உள்கட்டமைப்பு மேம்பாடு மட்டுமின்றி, அரசு பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில் சரளமாக பேச, தேவையான பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டு உள்ளோம்.அதற்காக, கூடுதலாக தற்காலிக ஆசிரியர் நியமிப்பது, ஆய்வகம் அமைப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ள முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
'கூரியரில்' தபால் அனுப்ப உயர்கல்வி துறை தடை
கூரியரில்' தபால் அனுப்ப உயர்கல்வி துறை தடை
கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள், அரசு நிர்வாக தபால்களை அனுப்ப, தனியார் கூரியர் நிறுவனங்களை பயன்படுத்தக்கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக உயர்கல்வி செயலகத்தில் இருந்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், கூடுதல் செயலர், கோபால் பிறப்பித்துள்ள உத்தரவு:
அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள், தொழில்நுட்ப இயக்குனரகம், கல்லுாரி கல்வி இயக்குனரகம் உள்ளிட்ட அலுவலகங்களும், உயர்கல்வி துறை அலுவலகங்களும், தங்களின் நிர்வாக பணிகளில், தபால்களை அனுப்ப, தனியார் கூரியர் நிறுவனங்களை பயன்படுத்த கூடாது.
தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு, அரசின் விரைவு தபால் சேவையான, 'ஸ்பீட் போஸ்ட்'டில் இருப்பது போன்ற விதிகள் இல்லை. எனவே, பாதுகாப்பான முறைக்கு, விரைவு தபால் சேவைகளையே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மொபைல் போனில் இனி அரசு சேவைகள்
மொபைல் போனில் இனி அரசு சேவைகள்
தமிழக அரசு, 'எம் - கவர்னென்ஸ்' என்ற, மொபைல் போன் வழி, இணைய சேவைகளுக்கு இனி முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. அதன்படி, அனைத்து துறைகளும், இணையதளங்களில் தக்க மாற்றங்களை செய்வதுடன், மொபைல் போன் செயலிகளையும் உருவாக்கவுள்ளன.
அனைத்து அரசு சேவைகள் மற்றும் திட்டங்கள் போன்றவற்றை, பொது சேவை மையங்கள் மூலம் தருவதற்கு, மத்திய அரசு, தேசிய அளவிலான கொள்கை வகுத்துள்ளது. அதையொட்டி, தமிழக அரசும், அதன் திட்டங்கள் மற்றும் சேவைகள், மக்களை வேகமாக சென்றடையும் வகையில், ஐ.டி., என்ற, தகவல் தொழில்நுட்ப துறைக்கு, தனி கொள்கை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:ஐ.டி., சட்டம், 2000ல், அனைத்து அரசு சேவைகளும், மின்னணு முறையில் மக்களுக்கு தரப்பட வேண்டும். அதன்படி, வரும், 2023க்குள், அரசு சேவைகள் அனைத்தும், இ - சேவை மையங்கள் வாயிலாகவும், பல்வேறு இணைய பயன்பாடுகள் வாயிலாகவும், மக்களுக்கு தருவதற்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மொபைல் போன்கள் பெருகியுள்ளதால், 'எம் - கவர்னென்ஸ்' என்ற, மொபைல் வழி சேவைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. எனவே, மொபைல் போன் வழியாக, அரசு சேவைகளை மக்களுக்கு வழங்க, அனைத்து அரசுத் துறைகளும் ஊக்குவிக்கப்படும்; மொபைல் போனில் பயன்பாடுகளை பெறும் வகையில், அந்தந்த துறையின், இணையதள தொழில்நுட்ப அமைப்புகள் மாற்றி அமைக்கப்படும். அதற்கேற்ப, மொபைல் செயலிகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை : தொலைந்த சான்றிதழ் பெற எளிய முறை அறிமுகம்
உயர்கல்வித் துறை : தொலைந்த சான்றிதழ் பெற எளிய முறை அறிமுகம்
அரசு தரப்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை தாக்கல் செய்து, தொலைந்த கல்வி சான்றிதழ்களின் நகல்களை பெறலாம்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
கல்லுாரி மற்றும் பல்கலைக கழகங்களின் மாணவர்கள், தங்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை தொலைத்தால், போலீசில் புகார் அளித்து, அதற்கான உறுதி சான்று பெற வேண்டும். அந்த சான்றுடன், பல்கலை மற்றும் கல்லுாரிகளில் விண்ணப்பித்து, சான்றிதழ் நகல்களை பெறலாம்.
போலீசில் புகார் அளித்து சான்றிதழ் பெறுவதில், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனால், பலர் சான்றிதழ் நகல் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தொலைந்த சான்றிதழின் நகல்களை பெற, எளிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஆதார் எண், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை காட்டினால், மாணவர்களுக்கு சான்றிதழ் நகல் தரலாம் என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த திட்டம், பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, பெரியார் பல்கலை உள்ளிட்ட, பல பல்கலைகளில் நடைமுறைக்கு வந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
2018ம் ஆண்டிற்கான TNPSC அட்டவணை
2018ம் ஆண்டிற்கான TNPSC அட்டவணை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2018-ம் ஆண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 3 ஆயிரத்து 325 பணி யிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.
2018-ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2015-ம் ஆண்டில் 12 தேர்வுகள் நடத்தப்பட்டு 5 ஆயிரத்து 28 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.2016-ம் ஆண்டில் 17 தேர்வுகளை நடத்தி 6 ஆயிரத்து 383 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன.
கடந்த ஆண்டில் 12 ஆயிரத்து 218 காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர் கூடுதலாக அட்டவணையில் தெரிவிக்காத பதவிகளுக்கும் சேர்த்து அறிவிக்கை வெளியிடப்பட்டன. அவற்றில் 18 தேர்வுகள் நடத்தப்பட்டன.
மீதமுள்ள 6 தேர்வுகள் இந்த ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளன.மேலும் கடந்த 2 ஆண்டு காலத்தில் பல்வேறு போட்டி தேர்வுகள் தொடர்பான, 99 பாடத்திட்டங்கள் வல்லுனர் குழு கொண்டு மேம்படுத்தப்பட்டன. கடந்த 5 ஆண்டில் தேர்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு காரணங்களால் முடிவு செய்யப்படாமல் இருந்த தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் பல்வேறு வகையான 23 பதவிகளில் 3 ஆயிரத்து 325 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வு மூலம் 1,547 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான அறிவிப்பு மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. குரூப்-1 தேர்வில்57 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் 3-வது வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இந்த காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்வுக்கு பிறகும் கூட மாறுதலுக்குட்பட்டது.
புதிய பாடங்களை கற்பிக்கும் முன்பாக ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு பயிற்சி
புதிய பாடங்களை கற்பிக்கும் முன்பாக ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு பயிற்சி
அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு நேற்று சென்னையில் தொடங்கியது. இந்த கருத்தரங்கை பள்ளிக்கல்வித்துறை, தொழிற்சாலை நிர்வாகிகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து நடத்தின.
கருத்தரங்கை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
கருத்தரங்கில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-
பள்ளிக்கல்வித் துறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. வருகிற கல்வி ஆண்டில் இருந்து 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் புதிய பாடத்திட்டம் அமல் படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.யைவிட சிறந்ததாக இருக்கும். புதிய பாடங்களை கற்பிக்கும் முன்பாக ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
சில அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் அருகில் உள்ள கட்டமைப்பு வசதி இல்லாத அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுக்க முன்வர வேண்டும். அந்த தொழில் நிறுவனங்களின் பெயர் அந்த பள்ளிகளில் பதிக்கப்படும். மேலும் அந்த நிறுவனங்களுக்கு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் வழங்குவார்.
‘நீட்’ தேர்வு உள்பட மத்திய அரசின் எந்த தேர்வையும் சந்திக்கும் ஆற்றல் மாணவர்களிடையே உருவாக்கப்படும். தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள தலைமை நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதன் காரணமாக ஏராளமான பட்டதாரிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பல உயர் பணிகளில் அமர்வார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த முறைகேட்டில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கே.சீனிவாசனும் தவறு செய்தது யார்? என்று விசாரணை நடத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் செலவில் 20 அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளை ஏற்படுத்த பள்ளிக்கல்வித் துறையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை துணைத் தலைவர் பொன்னுசாமி உள்பட பலர் பேசினார்கள். தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குனர் டி.ஜெகன்நாதன், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் ரெ.இளங்கோவன், தொடக்க கல்வித்துறை இயக்குனர் அ.கருப்பசாமி, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் க.நந்தகுமார் வரவேற்றார். இணை இயக்குனர் பொ.பொன்னையா நன்றி கூறினார்.
சனி, 6 ஜனவரி, 2018
EMIS -கைபேசி செயலி பயன்படுத்த பள்ளிகளுக்கு நிதி வழங்க உத்தரவு
EMIS -கைபேசி செயலி பயன்படுத்த பள்ளிகளுக்கு நிதி வழங்க உத்தரவு
SSA-SPD PROCEEDINGS-EMIS -கைபேசி செயலி (MOBILE APPLICATION) இணைய தள வசதி -பயன்படுத்த தொடக்க பள்ளிகளுக்கு 200 ரூ , நடுநிலை பள்ளி 400 ரூ , உயர் நிலைப்பள்ளி 600ரூ ,மேல்நிலை பள்ளி 800 ரூ நிதி வழங்க உத்தரவு
செவ்வாய், 2 ஜனவரி, 2018
2,084 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அரசு பள்ளிகளில் காலி
2,084 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அரசு பள்ளிகளில் காலி
பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 5 ஆயிரத்து 919 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன.
இப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.இந்த நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.12.2017 நிலவரப்படி உள்ள காலியிடங்கள் குறித்த விவரங்களை டிசம்பர் 29-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவுசெய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கும் பள்ளிக்கல்வி இயக்கு நர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டிருந்தார்.அந்த விவரங்களின் அடிப் படையில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி யில் மட்டும் 2,084 காலியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு:
தமிழ் - 270
ஆங்கிலம் - 228
கணிதம் - 436
அறிவியல் - 696
சமூக அறிவியல் - 454
தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 31 ஆயிரத்து 393 அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர் பதவியில் கணிசமான எண்ணிக்கையில் காலியிடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த காலியிடங்களில் 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
hasdddgs
ndnndvnvn
-
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. கேந்திரிய வித்யாலயாவில...
-
நாம் இன்று பள்ளியில் செய்ய வேண்டிய பணிகள் என்ன. ? 1.மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்குதல்... 2.MR., PAY BILL, AQUETENCY முடித்து...















