சனி, 30 டிசம்பர், 2017

போலீஸ் வேலைக்கு விண்ணப்பம்:கமிஷனர் ஆபிசில் உதவி மையம்

போலீஸ் வேலைக்கு விண்ணப்பம்:கமிஷனர் ஆபிசில் உதவி மையம்

போலீஸ் வேலைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் மொத்தம் 6,140 பணியிடங்கள் காலியாகவுள்ளது. 

இதில், 5,538 இரண்டாம் நிலை காவலர், 365 இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் 237 தீயணைப்பு வீரர்கள் பணியிடம் அடங்கும்.

இக்காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தேர்வு நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்கிறது. ஆன்லைன் மற்றும் அஞ்சல் துறை மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்வோருக்கு, ஜன., 27ம் தேதியும், அஞ்சல் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க ஜன., 30ம் தேதியும் கடைசி நாளாகும்.ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தரை தளத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு

ஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுவிழா கொண்டாட, 41.92 லட்சம் ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை, அந்தந்த பள்ளி மேலாண்மை குழுவின், வங்கி கணக்கு எண்ணில் பரிமாற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு, ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள், சமீபத்தில் நடந்தன.

இதேபோல், 130 அரசுப் பள்ளிகளில், வண்ண சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பள்ளி செயல்பாடுகளில், பெற்றோர், பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், ஆண்டுவிழா கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், அனைத்து மாணவர்களின் பங்களிப்பும் இருப்பதோடு, பெற்றோரையும் ஒருங்கிணைத்து, விழா ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பஞ்சாயத்து தலைவர் முதல், அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட, கவுன்சிலர், எம்.எல்.ஏ., ஆகியோரையும், விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும்.இதன்மூலம், பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதோடு, மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சாராம்சத்தை பொதுமக்களுக்கு, இவ்விழா நிகழ்வுகள் மூலம் எடுத்துரைக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

515 பள்ளிகளுக்கு...எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில், 80, 120 மற்றும் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கும், தொடக்கப்பள்ளிகளுக்கு தனியாக, நிதித்தொகை பிரித்தளிக்கப்படும். இதேபோல், 120 மற்றும் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கும், நடுநிலைப்பள்ளிகளுக்கு தனியாக, நிதியுதவி அளிக்கப்படும்.

இதன்படி, 254 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 261 நடுநிலைப் பள்ளிகளுக்கு, 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை வட்டார வளமையங்களுக்கு பிரித்தளித்து, அந்தந்த பள்ளி மேலாண்மை குழு பெயரில், காசோலையாக வழங்கப்படும்.ஏப்ரல் மாத இறுதிக்குள், ஆண்டு விழா கொண்டாட, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

இக்னோ பல்கலை. எம்பிஏ படிப்புக்கு மார்ச் 4-ல் நுழைவுத்தேர்வு: ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இக்னோ பல்கலை. எம்பிஏ படிப்புக்கு மார்ச் 4-ல் நுழைவுத்தேர்வு: ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இக்னோ பல்கலைக்கழக எம்பிஏ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மூலம்வழங்கும் எம்பிஏ படிப்பில் பட்டதாரிகள் சேரலாம்.

பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (எஸ்சி, எஸ்டி. ஓபிசி) எனில் 45 சதவீத மதிப்பெண் போதும். வயது வரம்பு கிடையாது. பணி அனுபவம் தேவையில்லை. நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.2018-ம் ஆண்டு பருவத்துக்குரிய எம்பிஏ மாணவர் சேர்க்கைக்கு வரும் மார்ச் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.1000.

ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மற்ற படிப்புகளுக்கு வி்ண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 31-ம் தேதி. கூடுதல் விவரங்கள் அறிய வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசிஎண்களில் தொடர்புகொள்ளலாம்.

SSA - 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் எஸ்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம்: மாநிலதிட்ட இயக்குநர் கே.நந்தகுமார் உத்தரவு.

SSA - 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் எஸ்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம்: மாநிலதிட்ட இயக்குநர் கே.நந்தகுமார் உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கக (எஸ்எஸ்ஏ) மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் 3 ஆண்டுக்குமேல் பணியில் உள்ளவர்களை ஆசிரியர் பயிற்றுநராக மாற்றிவிட்டு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களில் தகுதியானவர்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வுசெய்து அனுப்புமாறு மாநில திட்ட இயக்குநர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

போட்டித் தேர்வு: மாணவருக்கு இலவச கையேடு : 70 ஆயிரம் மாணவர்களுக்கு பயன்

போட்டித் தேர்வு: மாணவருக்கு இலவச கையேடு : 70 ஆயிரம் மாணவர்களுக்கு பயன்

நீட், ஐ,ஐ.டி., போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு கையேடுகள் வழங்கியுள்ளது. 'நீட்', ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போன்ற தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த சிறப்புமையங்கள் துவக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக மாவட்டம் தோறும் தலா 3 'தொடுவானம்' சிறப்பு மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.இம் மையங்களில் ஆன்-லைன் வசதியுடன் வீடியோ கான்பரசிங் முறையில் கல்வியாளர்கள், நிபுணர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இம்மையங்களில் பயிற்சி பெற தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.இவர்களுக்கு 'ஸ்பீடு இன்ஸ்டியூட்' மூலம் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் போட்டித்தேர்விற்கான 300 பக்க கையேடுகள் பாகம்,1, பாகம் 2 என இரு புத்தகங்களாக மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதில், தேவையான இடங்களில் அட்டவணை தரப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் பல்வேறு தேர்வுகளில் கேட்கப்பட்டிருந்தவை உட்பட 500க்கும் மேற்பட்ட கேள்விகள, இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஒரு புத்தகத்தின் மதிப்பு ரூ. 300க்கும் மேல் இருக்கும் என, கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

EMIS STATE REPORT - 27.12.2017

EMIS STATE REPORT - 27.12.2017 



கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு

கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:–

அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்,உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், 
கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கனவு ஆசிரியர் விருதுடன், ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2017–18–ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அதன்படி கனவு ஆசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை கூடுதல், இணை செயலாளர்,தொடக்கக் கல்வி இயக்குனர், அரசு தேர்வுகள் துறை இயக்குனர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனத்தின் இயக்குனர், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் திட்ட இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) உறுப்பினர் செயலராகவும் மாநில குழு அமைக்கப்படுகிறது.

முதன்மை கல்வி அலுவலர் தலைவராகவும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மூத்த உதவி தொடக்க கல்வி அலுவலர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமை ஆசிரியர், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது. ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்கள் வீதம் 192 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 28 டிசம்பர், 2017

அனைத்து பள்ளிகளுக்கும் நிதி வழங்க வலியுறுத்தல்!

அனைத்து பள்ளிகளுக்கும் நிதி வழங்க வலியுறுத்தல்!


School Calendar - January 2018

School Calendar - January 2018

பள்ளி நாட்காட்டி -ஜனவரி 2018


சத்துணவு முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடிமாவட்ட வாரியாக 'டெண்டர்' விட கோரிக்கை

சத்துணவு முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடிமாவட்ட வாரியாக 'டெண்டர்' விட கோரிக்கை

முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனால், 'பழையபடி, மாவட்ட வாரியாக ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
சத்துணவு,முட்டை விலை,நிர்ணயத்தில்,குளறுபடி,மாவட்ட வாரியாக,'டெண்டர்' விட,கோரிக்கை சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள, 1,000 பண்ணைகளில், தினமும், 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு எனும், 'நெக்' நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம், வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும்.சத்துணவு திட்டத்துக்காக, தினமும், 70 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இதற்காக, திருச்செங்கோட்டைச் சேர்ந்த, 'கிறிஸ்ட்டி' என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது.சத்துணவு திட்டத்துக்கு, 46 முதல், 53 கிராம் எடையுள்ள முட்டையை, 'சப்ளை' செய்ய வேண்டும். ஆனால், 35 முதல், 45 கிராம் எடை உள்ள முட்டையையே வினியோகம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை, அப்போதைய கொள்முதல் விலையை அடிப்படையாக வைத்து, ஒப்பந்தம் போடபடுகிறது. அதே விலைக்கு, ஆண்டு முழுவதும், சப்ளை செய்ய வேண்டும். இதன்படி, ஜூன் மாதம் ஒப்பந்தம் போடப்படுகிறது. இதற்காக, அந்த மாதத்தில் மட்டும், செயற்கை யாகவிலை உயர்த்தப்படுவதாகவும், அதன்மூலம் அரசுக்கு கோடி கணக்கில் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: முட்டை விலையை நிர்ணயம் செய்ய, 21 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், மார்க்கெட் விலையை கருத்தில் கொண்டு, விலை நிர்ணயம் செய்கின்றனர். வட மாநிலங்களில் முட்டை விலை உயரும் போது, தமிழகத்திலும் உயர்த்தப்படுகிறது.

கடந்த, நான்கு ஆண்டு களுக்கு முன், மாவட்ட வாரியாக ஒப்பந்தம் போடப்பட்டு, சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்யப்பட்டது. 2014 முதல், தமிழகம் முழுவதும், ஒருவரே ஒப்பந்தம் பெறும் முறையை அரசுஅறிமுகப்படுத்தியது.இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடர்ந்தோம். தனி நபருக்கு ஒப்பந்தம் விடுவதை, இப்போதும் நாங்கள் எதிர்க்கிறோம். முன்பு போல், மாதம் ஒரு முறை, மாவட்ட வாரியாக பண்ணை யாளர்கள் ஒப்பந்தம் எடுத்து, முட்டை சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தவறு நடக்காது:

'நெக்' நாமக்கல் மண்டல தலைவர்,செல்வராஜ் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்துக்கு தனி விலை கிடையாது. இந்தியாவில், முட்டை விலை உயரும் போது, உயரும்; குறையும் போது, குறையும். நாமக்கல், ஐதராபாத், ஓஸ்காட்ஆகிய மார்க்கெட்டை கணக்கில் கொண்டு முட்டை கொள்முதல்விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்தியாவில், நாமக்கல் மண்டல, 'நெக்' மட்டுமே நன்றாக உள்ளது. தனிப்பட்ட முறை யில் விலையை நிர்ணயம் செய்ய முடியாது. கமிட்டி மூலம் விலை நிர்ணயம் செய்ய படுகிறது. அதுவும், பண்ணையாளர்களுக்கு லாபம் தரும் வகையில், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தவறு ஏற்பட வாய்ப்பில்லை இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கல்வியில் 4 இயக்குனர்கள் மாற்றம் : நேர்மையான அதிகாரிக்கு, 'கல்தா'

பள்ளிக்கல்வியில் 4 இயக்குனர்கள் மாற்றம் : நேர்மையான அதிகாரிக்கு, 'கல்தா'

தமிழக பள்ளிக்கல்வி துறையில், நான்குஇயக்குனர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சராக, செங்கோட்டையன் பதவி ஏற்றது முதல், கல்வி திட்டங்களிலும், நிர்வாக அமைப்புகளிலும், அவ்வப்போதுஅதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன.

துறையின் உயர் பதவியான இயக்குனர்கள் முதல், கீழ் மட்டஉதவியாளர்கள் வரை, திடீர் மாற்றங்கள் நிகழ்வது சகஜமாகி விட்டது. ஒவ்வொரு அதிகாரியும், 'தற்போதைய பதவிகளில் நாளை இருப்போமா' என்ற நம்பிக்கையின்றி, பணிகளை தொடர்கின்றனர்.இந்த வரிசையில், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர்கள் நான்கு பேர், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர். இதில், அமைச்சருக்கு நெருக்கமான, அவரது மாவட்டத்தை சேர்ந்த, நேர்மையானவர் என, பெயர் பெற்ற அதிகாரியான கார்மேகம், தொடக்க கல்வி பொறுப்பில் இருந்துமாற்றப்பட்டுள்ளார்.அவருக்கு, பணிகளே இல்லாத, ஓரங்கட்டப்பட்ட இடமான, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனால், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை - மத்திய அரசு

பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை - மத்திய அரசு

வரும் ஆண்டில், பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்து, இந்த ஆண்டில் ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்திய அரசு, முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தமிழகத்தில், பொங்கல் பண்டிகையன்று, ஆந்திரா, கர்நாடகாமற்றும் பஞ்சாப் உட்பட, பல மாநிலங்களில், அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தாண்டு பொங்கலுக்கு மத்திய அரசு, கட்டாய விடுமுறைஅறிவிக்கவில்லை; விருப்பம் உள்ளோர், விடுப்பு எடுக்க அனுமதித்திருந்தது. அதற்கு, தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், மத்திய அரசு தன் அறிவிப்பை திரும்ப பெற்றது.இந்நிலையில், 2018க்கான, விடுமுறை பட்டியலை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

அதில், பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, புனித வெள்ளி, மிலாடிநபிஉள்ளிட்ட, 17 தினங்கள், 2018ல், கட்டாய விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஜன., 1, ஹோலி, ஓணம், சிவராத்திரி உள்ளிட்ட, 18 நாட்கள், விருப்பவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.விடுமுறை நாட்களை, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய, தமிழ்நாடு பிராந்திய, மத்திய அரசு ஊழியர் நல சங்க ஒருங்கிணைப்பு குழு கூடி முடிவெடுத்துள்ளது.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட்: மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட்: மறுபரிசீலனை செய்ய கோரிக்கை


ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன ஆசிரியர்கள் மீது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை ஐகோரட் தெரிவித்துள்ளது. இது குறித்து நீதிபதிகிருபாகரன் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நீதிபதியை விமர்சித்தஆசிரியர் சங்க நிர்வாகிகள் மன்னிப்புகோரிய நிலையில் அவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் மீதான 45 சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு ஜன.,4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிடப்படுமா? - ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு

பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் வெளியிடப்படுமா? - ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு

மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களும் நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு எழுதவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான கால அட்டவணையும், கருத்தியல் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளும் வெளியிடப்பட்டுள்ளது.
செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் ஒதுக்கீடு குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நடப்புக் கல்வியாண்டிலேயே கருத்தியல் தேர்வுக்கு (தியரி எக்ஸாம்) முன்னதாக செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்பதற்கான அரசாணைத் திருத்தங்களும் வெளியிடப்பட்டு விட்டன. வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில்அதற்கான மாதிரி வினாத்தாள் வடிவமைப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

அரையாண்டுத் தேர்வுகளும் 23-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அரையாண்டு விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் ஜன.2-ல் திறக்கப்பட உள்ளன.அரையாண்டுத் தேர்வையொட்டி பிளஸ் 1 மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வுகளை நடத்தி செய்முறைத் தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட கல்வித்துறை, செய்முறை பாடங்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் தொழிற்கல்வி சார்ந்த தட்டச்சு, வேளாண் செய்முறைகள், கணக்குப் பதிவியல், தணிக்கையியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு வினாத்தாள் வடிவமைப்பு கல்வித்துறையால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

முதன் முறையாக அரசுப் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள பிளஸ் 1 மாணவர்கள் இதனால் பாதிப்படைவர் என்று பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதத்தில் பொங்கல்விடுமுறைக்குப் பின் ஜன.18-ம் தேதி தொடங்கி31-ம் தேதி வரை திருப்புதல் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே செய்முறைத்தேர்வுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ள நிலையில், செய்முறை வினாத்தாள் வடிவமைப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாததால் மாணவர்களை எப்படி தயார்படுத்துவது என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.மாணவர் நலன் கருதி உடனடியாக பிளஸ் 1 வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு வினாத்தாள் வடிவமைப்பையும், மாதிரி வினாத்தாளையும் உடனடியாக வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர்மோவூர் ராமமூர்த்தி கூறியது: பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதவுள்ளதால் பதற்றத்தில் உள்ளனர். செய்முறைத் தேர்வுக்குரிய வினாத்தாள் வடிவமைப்புக் குறித்து கல்வித்துறை எந்த அறிவிப்பும் வெளியிடாததால் அறிவியல் மற்றும் தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில் கல்வித்துறை உடனடியாக செய்முறைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை வெளியிட வேண்டும் என்றார்.

12 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ( CEO ) இடமாற்றம்: 6 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

12 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ( CEO ) இடமாற்றம்: 6 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

பள்ளிக்கல்வித்துறையில் 12 மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், 6 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக பள்ளிக்கல்வி பணியில் முதன்மை கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான பதவியில் பணிபுரிந்து வரும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் 12 பேர் நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். அதன்படி, ராமநாதபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவாரூர், விருதுநகர், திருநெல்வேலி, கரூர், கோவை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கும், இணையான வேறு பதவிக்கும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.மேலும், 6 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

அதன்படி, கோவை, புதுக்கோட்டை, சென்னை தெற்கு, திருவண்ணாமலை,விருதுநகர், மதுரை ஆகிய 6 கல்வி மாவட்டங்களில் பணிபுரியும் மாவட்ட கல்வி அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அதிகாரியாகவும், பள்ளி கல்வித்துறையில் அதற்கு இணையான வேறு பதவிகளிலும் பணியமர்த்தப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு

மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 2018-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் கே.கோமதி விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 2018-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 2018 ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை, ஜன.26 - குடியரசு தினம், மார்ச் 29 - மகாவீர் ஜெயந்தி, மார்ச் 30 - புனித வெள்ளி, ஏப்ரல் 30 - புத்த பூர்ணிமா, ஜூன் 15 - ரம்ஜான், ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், ஆகஸ்ட் 22 - பக்ரீத்செப்டம்பர் 13 - விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 21 - மொகரம், அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி, அக்டோபர் 18 - தசரா (மகா நவமி), 19 - தசரா (விஜயதசமி),நவம்பர் 6 - தீபாவளி, நவம்பர் 21 - மிலாது நபி, நவம்பர் 23 - குருநானக் ஜெயந்தி, டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகிய 17நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, 31 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித் துறையில் 4 இயக்குநர்கள் இடமாற்றம்: தொடக்கக் கல்வி இயக்குநராக ஏ.கருப்பசாமி நியமனம்

பள்ளி கல்வித் துறையில் 4 இயக்குநர்கள் இடமாற்றம்: தொடக்கக் கல்வி இயக்குநராக ஏ.கருப்பசாமி நியமனம்

பள்ளி கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடக்கக் கல்வி இயக்குநராக ஏ.கருப்பசாமி நியமிக்கப் பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளி கல்வி துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட ஓர் அரசாணையில் கூறியிருப்ப தாவது:

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் (ஆர்எம்எஸ்ஏ) திட்ட இயக்குநராகநியமிக்கப்படுகிறார்.அதேபோல் ஆர்எம்எஸ்ஏ இயக்குர் எஸ்.கண்ணப்பன்இடமாற்றம் செய்யப்பட்டு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநராக பணியமர்த்தப்படுகிறார்.

தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் மாற்றப்பட்டு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநராக நியமிக்கப்படுகிறார். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி மாற்றப்பட்டு தொடக்கக் கல்வி இயக்குநராக பணியமர்த்தப்படுகிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நீட் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நீட் தேர்வுக்காக அரசு பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயிற்சி பெறும் 75 ஆயிரம் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த ஆண்டே இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 950 பேருக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம், பிளஸ் 2 மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம்  1 கோடியே 45 லட்சம் ரூபாய் காமராஜர் பிறந்தநாளில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு முதல்முறையாக அரசின் கொள்கை முடிவாக இது வழங்கப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக அரசு, அரசு உதவி பெறும் மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து மேலை நாடுகளுக்கு அனுப்பி அறிவியல், தொழிநுட்பம், கலை, இலக்கியம் போன்றவற்றை தெரிந்துகொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதில் முதன்முறையாக 100 மாணவர்களைத் தேர்வு செய்ய உள்ளோம். அதற்காக ரூ.3 கோடி ஒதுக்க உள்ளோம். ஜப்பான், சீனா, அமெரிக்கா, தென்கொரியா, ஜெர்மன், ரஷ்யா, இங்கிலாந்து பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன் செல்ல 4 குழுக்களை அனுப்ப உள்ளோம்.குறிப்பிட்ட பாடத்தையே மாணவர்கள் படிக்கும் நிலையில் மாற்றி உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல் நிலை செல்லும் மாணவர்கள் ஒரே மாதிரி பாடங்களை படிக்கும் நிலை உள்ளது. மருத்துவம், பொறியியல்,விவசாயம், பல் மருத்துவம், கலை அறிவியல், இலக்கியம் போன்றவைகளைத்தான் படிக்கிறார்கள் அதை மாற்றும் வகையில் புதியபாடங்களை கற்க புதிதாக எட்டுக்கு நான்கு என்கிற முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.நீட் தேர்வுக்கு எந்த அளவில் வரவேற்பு உள்ளது என்பதை இரண்டு நாளில் தெரிவிக்கிறோம். தமிழகம் முழுதும் 100 மையங்களில் 75,000 மாணவர்கள் பதிவு செய்துபயிற்சி பெறுகின்றனர். சென்னையில் நான்கு மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அடுத்தாண்டு ஒரு லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம். அது வழங்கப்பட்ட பிறகு அடுத்தாண்டு அவர்கள் மத்திய அரசின் நீட் தேர்வை சிறப்பாக சந்திப்பார்கள்.நீட் கோச்சிங் பயிற்சிக்கு பதிவு செய்து வரும் 75,000 மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்படும். அந்த மாணவர்களுக்குமுன்னுரிமை கொடுத்து அடுத்த ஆண்டு வழங்கப்படும் லேப்டாப்பை இந்த ஆண்டே வழங்க உள்ளோம். இதன் மூலம் அவர்கள் மத்திய அரசின் தேர்வை சிறப்பாக எதிர்கொள்வார்கள்.

பிளஸ் 2 முடித்தும் கல்லூரிக்குச் சென்ற மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க முடியவில்லை.அதற்குக் காரணம் லேப்டாப் தயாரிக்கும் ஒரு நிறுவனம் உயர் நீதிமன்றம் சென்றதால் பிரச்சினை ஏற்பட்டது.  நல்ல நிறுவனத்தை ஆய்வு செய்து எல்காட் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம். அடுத்த ஆண்டு இது போன்ற பிரச்சினை வராது.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

ஜனவரி 8-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளர் பூபதி இதனை அறிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் உரையாற்றுகிறார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதிவரை நடந்தது. அதன்பின், பேரவைக் கூட்டத்தை முடித்து வைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இந்நிலையில், அக்.6-ம் தேதி புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். வழக்கமாக ஒரு சட்டப்பேரவை கூட்டம் முடிந்தால், அது முடிந்த தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்துக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், ஜன. 18-ம் தேதிக்குள் அடுத்த கூட்டத்தை நடத்த வேண்டும்.

இந்நிலையில் ஜனவரி 8-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க உள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதிகப்பட்சமாக 3 அல்லது 4 நாட்கள் நடைபெறலாம். ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து இறுதிநாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவார். அதைத்தொடர்ந்து, பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து மார்ச் மாதம் 2018-19ம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப முடிவு செய்துள்ளன.

குறிப்பாக ஓகி புயல் பாதிப்பு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு, போக்குவரத்து, மின்வாரிய ஊழியர் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளை எழுப்பி பேசுவார்கள். இதனால் ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனும் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் செல்கிறார். இதனால், அவரது வருகையும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு ரூ 2.7 கோடியில் பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகம் முழுவது 100 மையங்களில் 75,000 மாணவர்களுக்கு கான்பிரன்ஸ் மூலம் போட்டித்தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.

2018 ஆம் அண்டில் ஒரு லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

பொதுத்தேர்வு பயிற்சி மையங்களை நடத்த போதிய நிதி இல்லை
பொதுத்தேர்வு பயிற்சி மையங்களை நடத்த போதிய நிதி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். 100 மையங்களில் தமிழக அரசால் பொதுத்தேர்வு பயிற்சி நடைபெற்று வருகிறது என்றும் செங்கோட்டையன் தெரிவிட்டுள்ளார். மேலும் 312 இடங்களில் பயிற்சி மையங்கள் நடத்த தமிழக அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறியுள்ளார்.

ரயில்வேயில் 2.2 லட்சம் காலிப் பணியிடங்கள்: ஆட்களை நிரப்ப விரைவில் தேர்வு அறிவிப்பு

ரயில்வேயில் 2.2 லட்சம் காலிப் பணியிடங்கள்: ஆட்களை நிரப்ப விரைவில் தேர்வு அறிவிப்பு

ரயில்வேயில் 2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரயில்வேயில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவதற்கென அமைக்கப்பட்டுள்ள ரயில்வே பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பட்டு வருகிறது.



இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று புதன்கிழமை பேசிய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்தார். அதில் தில்லியை தலைமையிடமாகக் கொண்ட வடக்கு ரயில்வே மண்டலத்தில் 27 ஆயிரத்து 537 காலிப் பணியிடங்களும், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு ரயில்வேயில் 19 ஆயிரத்து 942 காலிப் பணியிடங்களும், மத்திய ரயில்வேயில் 19 ஆயிரத்து 651 பணியிடங்களும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களும் உள்ளன.
நாட்டிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மொத்தம் 41,128 வேலை வாய்ப்புகள் உள்ளன.

ரயில்வேயில் புதியவர்கள் சேர்க்கைக்கு இணையான ஓய்வுபெறுவோர் எண்ணிக்கை இருப்பதே காலிப் பணியிடங்கள் குறையாமல் இருக்கக் காரணம் என்றும் காலிப் பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே திகழ்கிறது. காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஒரு தொடர்ச்சியான செயலாகும். இதில் காலியிடங்கள் ஏற்படுவதற்கான கால இடைவெளிகளுக்கு இடையே எப்போதும் கால அவகாசம் உள்ளது. இது காலியிடங்களை அறிவித்தல், தேர்வுகள் நடத்துதல் போன்றவைகள் மூலம் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை ரயில்வே தேர்வாணையம் என்ற அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன என கோயல் கூறினார்.

மேற்கண்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

கேந்திரிய வித்யாலயாவில் பணி | கே.வி. பள்ளிகள் என்று அழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடிநியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

இதில், துணை ஆணையர், உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, நிதி அலுவலர், உதவிப் பொறியாளர், உதவியாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர், மேல்நிலை எழுத்தர், கீழ்நிலை எழுத்தர், சுருக்கெழுத்தர், நூலகர் எனப் பல்வேறு விதமான பணிகளில் மொத்தம் 1,017 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி, வயதுவரம்பைப் பொறுத்தமட்டில், பதவியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். அப்ஜெக்டிவ் முறையிலான எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். தகுதியுள்ள நபர்கள் கே.வி.எஸ். இணையதளத்தை (www.kvsangathan.nic.in) பயன்படுத்தி 2018 ஜனவரி 11-ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக்கான அனுமதிச்சீட்டையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பதவியிலும் உள்ள காலியிடங்கள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுக் கட்டணம், தேர்வுக்கான பாடத்திட்டம், ஆன்லைன் விண்ணப்பமுறை உள்ளிட்ட விவரங்களை கே.வி.எஸ். இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம். 

அரசு கணினிப் பயிற்சியை புறக்கணித்த ஆசிரியர்கள்!

அரசு கணினிப் பயிற்சியை புறக்கணித்த ஆசிரியர்கள்!


5538 காவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்.

5538 காவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்.

தமிழ்நாடு காவலர் தேர்வு 2017-18 ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 28.12.2017 ...முதல் 27.01.2018 வரை விண்ணப்பிக்கலாம்..


புதன், 27 டிசம்பர், 2017

Flash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்.

Flash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்.

பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்குனராக ராமேஸ்வர முருகன், தொடக்கக்கல்வி இயக்குனராக கருப்பசாமி,  முறைசாரா கல்வி இயக்குனராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக அரசு

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக அரசு

தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்.



மாவட்டம் தோறும் 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து தமிழகம் முழுவதும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

 மாவட்டந்தோறும் 30 மாணவர்கள் என 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது - அமைச்சர் செங்கோட்டையன்

* 10, +2 மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் ரூ 20,000 வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

* அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

* 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்

இந்தியாவில் இனி பேஸ்புக் பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.

இந்தியாவில் இனி பேஸ்புக் பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.


இந்தியாவில் 24.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பேஸ்புக் கணக்குகளில் ஏராளமானவை போலியானவை என தெரிய வந்துள்ளது. இத்தகைய போலி கணக்குகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக, பேஸ்புக் பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை வைத்து, அவர் உண்மையான பெயரில் தான் கணக்கு வைத்துள்ளாரா என பேஸ்புக் சரிபார்க்க முடிவு செய்துள்ளது.

மொபைல் பேஸ்புக் இணையதளத்தில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, புதிதாக பேஸ்புக் கணக்கு துவங்பவர்களிடம் ஆதார் அட்டையில் உள்ளது போன்று உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள். அது உங்களை அடையாளம் காண உங்கள் நண்பர்களுக்கு எளிதாக என தெரிவிக்கப்பட உள்ளது. ரெட்டிட், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. 

அதே சமயம், அனைவரும் இதனை செயல்படுத்த அவசியமில்லை. புதிதாக கணக்கு துவங்குபவர்களுக்கு மட்டுமே இந்த முறை அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மொபைல் மூலம் பேஸ்புக் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. அதனால் தங்களின் உண்மையான பெயர்களை பயன்படுத்த விரும்புபவர்கள், ஆதார் அட்டையில் உள்ளபடி தங்களின் பெயர்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மற்றபடி கட்டாயமில்லை என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.



கேந்திரிய வித்யாலயாவில் பணி | கே.வி. பள்ளிகள் என்று அழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதில், துணை ஆணையர், உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, நிதி அலுவலர், உதவிப் பொறியாளர், உதவியாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர், மேல்நிலை எழுத்தர், கீழ்நிலை எழுத்தர், சுருக்கெழுத்தர், நூலகர் எனப் பல்வேறு விதமான பணிகளில் மொத்தம் 1,017 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி, வயது வரம்பைப் பொறுத்தமட்டில், பதவியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். அப்ஜெக்டிவ் முறையிலான எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். தகுதியுள்ள நபர்கள் கே.வி.எஸ். இணையதளத்தை (www.kvsangathan.nic.in) பயன்படுத்தி 2018 ஜனவரி 11-ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக்கான அனுமதிச்சீட்டையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பதவியிலும் உள்ள காலியிடங்கள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுக் கட்டணம், தேர்வுக்கான பாடத்திட்டம், ஆன்லைன் விண்ணப்பமுறை உள்ளிட்ட விவரங்களை கே.வி.எஸ். இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

'நீட்' தேர்வில் மாற்றம் : கருத்து கூற வாய்ப்பு

'நீட்' தேர்வில் மாற்றம் : கருத்து கூற வாய்ப்பு

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வில் மாற்றம் செய்ய, மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், உயர் சிறப்பு மருத்துவ படிப்பு களுக்கு, நீட் தேர்வின்படி, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
தற்போது, அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும், இந்தத் தேர்வு கட்டாயமாகி உள்ளது.

இந்நிலையில், 2018 முதல், உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வில் மாற்றம் செய்ய, மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனை மற்றும் கருத்துகளை, mepsection-mohfw@gov.in என்ற, இணையத்தில், ஜன., 5க்குள் தெரிவிக்கலாம்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

பணி நிரந்தரம் கோரி, அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் இன்று போராட்டம் அறிவித்துஉள்ளனர். அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, வேளாண்மை போன்ற சிறப்பு பாடங்களை நடத்த, 2012ல், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில், 12 ஆயிரத்து, 637 பேர் மட்டுமே, தற்போது பணியாற்றுகின்றனர்.


இவர்கள் வாரந்தோறும், மூன்று அரை நாட்கள் என, மாதத்தில் ஆறு நாட்கள் வகுப்பு எடுக்கின்றனர்; 7,700 ரூபாய் மாத ஊதியம் தரப்படுகிறது.

இந்நிலையில், பணி நிரந்தரம் கோரி, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர், இன்று மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

பள்ளி வேலை நாளில், அனுமதியின்றி போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கணினிகள்:சொந்த கணினி கொண்டு வர வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கணினிகள்:சொந்த கணினி கொண்டு வர வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான கணினிகள் மற்றும் மையங்கள் கிடைக்காமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஏழாவது சம்பளக் குழு முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்த 'ஜாக்டோ ஜியோ' சார்பில் செப்.,7 முதல் 15 வரை வேலை நிறுத்த போராட்டங்கள் நடந்தன. உயர்நீதிமன்றம் தலையீட்டால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம், 'வேலை நிறுத்த காலத்தை ஈடுகட்ட சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் டிச.,27 முதல் 30 வரை நடக்கும் கணினி பயிற்சியில் (ஐ.சி.டி.,) பங்கேற்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.

'அரையாண்டு தேர்வு விடுமுறை காலத்தில் பயிற்சி நடத்த வேண்டும் என்ற உத்தரவு ஆசிரியர்களை பழிவாங்கும் செயல்,' என, சர்ச்சை எழுந்தது.இந்நிலையில், மாவட்டத்தில் இன்று முதல் (டிச., 27) 11 மையங்களில் இதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 976 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். பெரும்பாலான அரசு பள்ளி மையங்களில் கணினிகள் இல்லாத நிலையில் பயிற்சிக்கு பயன்படுத்த கணினிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சொந்தமாக 'லேப்டாப்' கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறியதாவது: 'போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், போராட்ட காலத்தால் பாதிக்கப்பட்ட மாணவர் நலன் கருதி அதை ஈடுசெய்ய பணி செய்ய வேண்டும்,' என நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் அரையாண்டு தேர்வு விடுமுறையில் ஆசிரியர்களை பழிவாங்க பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிக்கு தேவையான கணினிகள் இல்லை. பயிற்சி மையங்களை முடிவு செய்வதிலும் குழப்பம் ஏற்பட்டது, என்றனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், "பயிற்சிக்கு உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள், இரண்டு நாள் ஈடுபட்டால் 2 நாள் என்ற அடிப்படையில் பயிற்சியில் பங்கேற்றால் போதும்.

கணினி தட்டுப்பாட்டை போக்க சொந்த லேப்டாப் கொண்டுவர கூறியுள்ளோம். தனியார் கல்லுாரி, கல்வி நிறுவனங்களில் கணினிகள் பெற்று பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார்.

192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் 192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 


பள்ளிக் கல்வித்துறையில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கும் பணி நடப்பதை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு  பயிற்சி கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டு பேசியதாவது:

 சட்டப் பேரவையில் நடந்த மானியக் கோரிக்ைககள் மீதான விவாதங்களின் போது நடப்பு 2017-18ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே இணக்கமான சூழல் உருவாவதற்காக கனவு ஆசிரியர் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு 192 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான அரசாணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விருதுகளை பெறுவதற்கான தகுதிகள் குறித்த பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு 192 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பாராட்டு சான்றுடன் ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்த விருதுக்காக ஆண்டுக்கு ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய பாடத்திட்டம் பிளஸ் 1 வகுப்புக்கு இந்த பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் பாடத்திட்டங்கள் மாற்றம் வருவதால் ஆசிரியர்கள், பாடத்திட்டத்துடன்  நற்பண்புகளை இணைத்து கற்பித்தலும் கற்றலும் என்ற அடிப்படையில் value integrated teaching and learning என்ற தலைப்பில் பயிற்சி கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி ைகயேடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.  புதிய பாடத்திட்டம் எழுதும் பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டுக்கான புதிய புத்தகங்கள் அச்சிடும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்தில் நடந்த குளறுபடிகள் மீது விசாரணை நடந்து வருகிறது. அது முடிவுக்கு வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார். 

தமிழக அரசு பள்ளிகளில் காலிப்பணியிட விவரம் 29ம் தேதி வரை பதிவு

தமிழக அரசு பள்ளிகளில் காலிப்பணியிட விவரம் 29ம் தேதி வரை பதிவு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கலந்தாய்வு தொடர்பாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி காலிப்பணியிட விவரங்கள் இணையதளம் மூலம் முதன்முறையாக பள்ளிகளில் பதிவு செய்யப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் டிச.26ம் தேதிக்குள்(நேற்று) விவரங்களை பதிவு செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையால் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதற்கிடையில் பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன் நேற்று முன்தினம் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காலிப்பணியிட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யப்படுவதற்கு வரும் 29ம் தேதி பிற்பகல் வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DEE - உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில்-தற்காலிக ஊழியர்கள் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும் -முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்ட கேள்விக்கு -திண்டுக்கல் மாவட்ட DEEO அவர்கள் அனைத்துAEEO /AAEEO அலுவலர்களுக்கு ஆணை!

DEE - உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில்-தற்காலிக ஊழியர்கள் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும் -முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்ட கேள்விக்கு -திண்டுக்கல் மாவட்ட DEEO அவர்கள் அனைத்துAEEO /AAEEO அலுவலர்களுக்கு ஆணை!


இப்படியும் ஒரு AEEO ! அசத்தும் அரசு அலுவலர் !!

இப்படியும் ஒரு AEEO ! அசத்தும் அரசு அலுவலர் !!




அசத்தும் அரசு அலுவலர் தான் பணி புரியும் இடம் ஒரு கோவில்!!அந்த கோவிலை சொந்த செலவில் புதுப்பித்த, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்!

வேலூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தில், நெடுங்காலமாக பராமரிப்பின்றி இருந்த மாதனூர் உதவித் தொடக்க கல்வி அலுவலகத்தை, கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர், திரு.மாதேஷ் அவர்களின் சீரிய முயற்சியால் தன் சொந்த பணம் ரூபாய் 22,000/- செலவு செய்து அலுவலகத்தை மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒரு முன்மாதிரி அலுவலகமாக மாற்றி அமைத்து உள்ளார்...

தமிழகத்தின் பெருவாரியான ஒன்றியங்களில் 7 வது ஊதிய குழுவின் புதிய ஊதியத்தை பெற இன்று வரை போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் டிசம்பர் 1 ம் தேதி அன்று மாதனுர் ஒன்றியத்தில் புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகையையை பெற்று தந்து ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார்

💥கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக எந்த ஆசிரியரையும் அலுவலகப் பணிக்காக ஈடுப்படுத்ததில்லை.

💥அலுவலகப் பணி எதுவாக இருந்தாலும் தாமதப்படுத்தாமல் உடனுக்குடன் முடிக்கப்படுகிறது.

💥 ஒவ்வொரு மாதமும் ஆசிரியர் குறைதீர்வு நாளில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த மாத ஊதிய பட்டியல் தயார் செய்வதற்கு முன்பே பெற்று வழங்கப்படுகிறது.

💥 ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளில் பல ஆண்டுகளாக இருந்த குறைப்பாடுகளை நீக்கி முறைப்படுத்தப்பட்டுள்ளது.

💥சங்கவேறுப்பாடின்றி ஆசிரியர்களின் குறைப்பாடுகளை  பொறுப்பாளர்களிடம் கேட்டறிந்து சரியானவையாக இருந்தால் உடனே முடிக்கப்படுகிறது.

💥ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பசுமைப்பள்ளி , மரகன்றுகள் நடுவதில் மிக ஆர்வமாக இருந்து ஊக்குவித்து வருகிறார்

💥அலுவலகத்தில் பராமரிக்கப்படவேண்டிய அனைத்து பதிவேடுகள் நடைமுறைக்கு கொண்டு வந்ததுடன் அனைத்து பள்ளிகளிலும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் அவசியத்தை ஒவ்வொரு தலைமை ஆசிரியர் கூட்டத்திலும் ஆசிரியர்களிடம் விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை கூட்டப்படுகிறது.

💥இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நண்பராக இருந்து எப்போதும் புன்னகையுடன் பதிலளித்து பேசி பிரச்சினைகளை துன்பங்களாக இல்லாமல் சவால்களாகவும் வாய்ப்புகளாகவும் ஏற்றுக்கொண்டு நிர்வாகம் செய்யும் திறமை உள்ளவர்.

💥அனைத்து ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமான வரிக்கு TDS செய்து படிவம் 24A ல் பதிவேற்றம் செய்து படிவம்16   அனைவருக்கும் வழங்க முயற்சித்து வருகிறது.

💥  ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆங்கிலம்  தமிழ் அகராதி வழங்க முயற்சித்து வருகிறது.

அவரது கடமை உணர்வுக்கும் அற்பணிப்புக்கும், மாதனூர் ஒன்றிய ஆசிரியர்களின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்!!
💐💐💐💐💐💐💐💐💐

வாழ்த்துக்களை பகிர👇👇👇
திரு, கோ.மாதேஷ், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்.
📱8110077554

Flash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்.

Flash News :பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்.

பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்குனராக ராமேஸ்வர முருகன், தொடக்கக்கல்வி இயக்குனராக கருப்பசாமி,  முறைசாரா கல்வி இயக்குனராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை

சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை

10,12ம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அட்டவணை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளிகளில் பெயர் பலகைகளாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

ஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

ஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

பணிநிரந்தரம் கோரிய பகுதி நேர ஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் போராடும் ஆசிரியர்களை கலைந்து செல்ல காவல்துறை வலியுறுத்தியுள்ளது. பணி நிரந்தரம், முழுநேர வேலை வழங்கக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Flash News :- CEO'S AND DEO'S TRANSFER & PROMOTION | G.O PUBLISHED

Flash News :- CEO'S AND DEO'S TRANSFER & PROMOTION | G.O PUBLISHED




செவ்வாய், 26 டிசம்பர், 2017

தேசிய கல்வி ஆராய்ச்சி பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தேசிய கல்வி ஆராய்ச்சி பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு



தேசிய கல்வி ஆராய்ச்சி பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு | தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் 8 பாடங்களைப் பயிற்றுவிக்கின்றன. ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் 3 பாடங்களே பயிற்றுவிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை பின்பற்றுவது இல்லை. லாபநோக்கில் தனியார் புத்தக நிறுவனங்கள் 4 மடங்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்யும் புத்தகங்களையே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாணவர்களிடம் திணிக்கின்றன. இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை பின்பற்ற சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:- என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரைப்படி முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு தாய்மொழியுடன், ஆங்கிலம், கணிதம் மட்டுமே போதிக்கப்பட வேண்டும். பெரும்பாலான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாணவர்களின் வயதுக்கேற்ற கல்வியை புகட்டுவதில்லை. மழலைப்பருவத்தில் மாணவர்களுக்கு கல்வி ஒரு சுமையாக இருக்கக்கூடாது. என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகமும் ஏற்கனவே பள்ளிகளை எச்சரித்துள்ளது. இது போதாது. முறையாக ஆய்வு செய்து நடவடிக்கையை கடுமையாக்க வேண்டும். தேவைப்பட்டால் அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும். எனவே, அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. பதில் அளிக்க வேண்டும். விசாரணை ஜனவரி 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பள்ளி ஆசிரியர்கள் தொந்தரவால் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் தற்கொலை? பட்டியல் அளிக்க முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு

பள்ளி ஆசிரியர்கள் தொந்தரவால் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் தற்கொலை? பட்டியல் அளிக்க முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு


பள்ளி ஆசிரியர்கள் தொந்தரவால் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் தற்கொலை? பட்டியல் அளிக்க முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு | பள்ளி ஆசிரியர்களின் தொந்தரவினால், கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்ற பட்டியலை அளிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த 4 மாணவிகள் கடந்த நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டனர். படிப்பில் அக்கறை காட்டாததால் ஆசிரியர்கள் மாணவிகளை திட்டியதோடு, அவர்களது பெற்றோரை அழைத்து வரச்சொன்னதால் மாணவிகள் தற்கொலை முடிவை எடுத்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக அந்த பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து ஆசிரியர்கள் தொந்தரவால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் விதமாக, முதல் கட்டமாக 2014-2015, 2015-2016, 2016-2017 ஆகிய 3 கல்வி ஆண்டுகளில் எத்தனை மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள் என்பது குறித்த பட்டியலை தயாரிக்க பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் முடிவு செய்தது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மேற்படி 3 கல்வி ஆண்டுகளில் ஆசிரியர் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியலை அளிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதில், 'பள்ளிகளில் ஆசிரியர்களின் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவ-மாணவிகளின் விவரங்களை 22-ந்தேதி (நேற்று முன்தினம்) மாலை 5 மணிக்குள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் அனுப்ப வேண்டும். அப்படி எதுவும் சம்பவம் நடக்கவில்லை என்றால் 'இல்லை' என்ற அறிக்கையை அளிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் தொந்தரவினால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களை பற்றிய விவரம், தற்கொலைக்கான காரணம், தற்கொலைக்கு காரணமான ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர் பெயர், காவல் துறை வழக்கு விவரம், வழக்கின் தற்போதைய நிலை ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை முதன்மைக்கல்வி அதிகாரிகள் முன்தினம் காலை தான் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி இருக்கிறார்கள். அன்று மாலையிலேயே தகவல்களை அளிக்க சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டு இருந்தது. மேலும் உண்மைக்கு மாறாக தகவல்களை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை எந்தெந்த மாவட்டங்களில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு பட்டியல் வந்திருக்கிறது என்ற தகவல் தெரியவில்லை. இந்த சுற்றறிக்கை பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ஆசிரியர்களுக்கு மாணவ -மாணவிகளை வழி நடத்துவது தொடர்பாக முறையான ஆலோசனை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | வருகிற பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் 10 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகளாக அதிகரிக்கப்பட உள்ளது. 73 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி மையங்களில் சேர்ந்துள்ளனர். இந்த அரசை பொறுத்த வரையில் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு 5 லட்சத்து 80 ஆயிரம் மடிக்கணினி இலவசமாக வழங்கப்படவுள்ளது. இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் மாவட்ட நூலகங்களில் தொடங்கப்படும். மாணவ-மாணவிகளிடையே மன அழுத்தத்தை போக்குவதற்காக பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இதனால் அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியை பெறுவார்கள். வருகிற பிப்ரவரி மாதத்தில் புதிய பாடத்திட்டங்கள் வெளியிடப்படும். 3 ஆண்டுகளுக்குள் பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என்பதற்கு பதிலாக 2 ஆண்டுகளிலேயே புதிய பாடத்திட்டங்களை மாற்றுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 8 ஆயிரம் பேருக்கு வேலை கோபி அருகே கொளப்பலூரில் புதிய டெக்டைல்ஸ் பார்க் அமைக்க அடுத்த மாதம் தொடக்க விழா நடைபெறுகிறது. இதன் மூலம் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 72 வகையான தொழிற்கல்வி பிளஸ்-1 வகுப்பில் இருந்தே கொண்டுவரப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மூலமாக மாதம் ஒரு முறை அரசு பள்ளிக்கூடங்கள் முழுவதுமாக சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பரிந்துறையின் பேரில் பிப்ரவரி மாதத்துக்குள் பணி நியமனம் செய்யப்படும். இவ்வாறு இவர் கூறினார்.

மாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது

மாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது

மாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது | மாணவர்கள், பெற்றோர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களை போக்கவும், ஆலோசனை வழங்கவும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இலவச தொலைபேசி எண் வசதியுடன் உதவி மையம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள்-மாணவிகள், பெற்றோர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர துறைகள் குறித்த தேவையான தகவல்கள், தெளிவுரைகள், ஆலோசனைகள் ஆகியவற்றை பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் (14417) வழியாக தொடர்பு கொள்ளும் வழிகாட்டி உதவி மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மையத்தின் பயன்பாடுகள் வருமாறு:- போட்டித்தேர்வு * இந்தமையம் மூலம் கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் வணிகம், மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகள் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்குதல். * மாநில அளவிலும், தேசிய அளவிலும் உயர் கல்விக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல்களை தெரிவிப்பது. * மாணவர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகளை வழங்குதல். * கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்த வழிகாட்டுதல். திட்டங்கள் * அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களால் அறிவிக்கப்படும் திட்டங்களையும் பயன்களையும் மாணவர்களுக்கு தெரியப்படுத்துதல். * பாடத்திட்டம் குறித்த தகவல்களையும் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகளையும் தெரியப்படுத்துதல். * உடல் நலம், பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை தெரிவித்தல். * மாணவர்களின் திறன் மேம்பாடு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கு தேவையான பயிற்சி நடத்த கையேடுகள் வழங்குதல். இந்த தகவலை டி.பி.ஐ. வளாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேர்வு மதிப்பெண்கள்: பக்கங்களின் எண்ணிக்கைக்கா? மாணவர்களின் புரிதலுக்கா?

தேர்வு மதிப்பெண்கள்: பக்கங்களின் எண்ணிக்கைக்கா? மாணவர்களின் புரிதலுக்கா?

தமிழகத்தில் சுமார் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசுமற்றும் நிர்வாக ஒதுக்கீடு என சுமார் 2.50 லட்சம் இடங்கள் உள்ளன. பொறியியல் கல்லூரிகள் குறைவாக இருந்தபோது பிளஸ் 2-வில் கணிதம்,
வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் இருக்க வேண்டும் என குறைந்தபட்சத் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கி வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றதால் தகவல் தொழில் நுட்பம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கு அதிகத் தேவை ஏற்பட்டது. அதனால் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாகத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்குமிருந்த திருமண மண்டபங்களும் மாட்டுக் கொட்டாய்களும் கூட பொறியியல் கல்லூரிகளாக உருமாறின. ஒரு சில கல்லூரிகளின் விளம்பரங்களைப் பார்த்தால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தோற்றுப் போய்விட வேண்டும். இந்தியாவில்ஆராய்ச்சிப் படிப்புப் படித்தவர்கள் அனைவரும் தங்கள் கல்லூரியில்தான் பணிபுரிவது போலப் பட்டியலிட்டிருப்பார்கள். ஆனால் அண்ணா பல்கலைக்கழகமோ அல்லது அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்கழகமோ ஆய்வுக்குச் சென்றால் அங்கு யாருமே இருக்க மாட்டார்கள்.

ஓரிரு நாள்களுக்கு முன் அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பணியிலிருந்து விலகியது போலக் கடிதம் மட்டும் ஆய்வுக்கு வந்தவர்களுக்குக் காட்டப்படும். ஒவ்வொரு சுயநிதிக் கல்லூரியும் ஏதாவது ஒரு வகையில் மாணவர்களிடம் கட்டணத்தைச் சுரண்டுவதில் மட்டும் தயக்கம் காட்டுவதேயில்லை. அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்தாவிட்டால் அங்கு படிக்கவே முடியாது. இது தொடர்பாகப் புகார் அளித்தால்அண்ணா பல்கலைக் கழகம் அவ்வப்போது பல கல்லூரிகளில் ஆய்வு நடத்தும். ஆனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது அண்ணா பல்கலைக்கழகத்துக்கே வெளிச்சம். வேலை வாய்ப்பின்மை, கட்டணக் கொள்ளை, ஊதியம் குறைவு, தரமில்லாத ஆசிரியர்கள் எனப் பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவேபொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வோர் ஆண்டும்சுமார் ஒரு லட்சம் பொறியியல் இடங்கள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் காலியாகவே உள்ளன. இதனால் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வர வேண்டிய நிதி குறைகிறது.

இதை ஈடுகட்டவோ என்னவோ, ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்களிடம் இருந்து பல்வேறு கட்டணங்களின் மூலம் பணம் பெறத் தொடங்கி இருக்கிறது அண்ணா பல்கலைக் கழகம். ஒவ்வொரு பருவத்திலும் தேர்வுக் கட்டணமாக, சுமார் 1.50 லட்சம் மாணவர்களிடம் தாளுக்கு ரூ.150 வீதம் 6 தாள்களுக்கு ரூ.900 எனக் கணக்கிட்டால் மொத்தம் ரூ.13.50 கோடி வசூலிக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது சுமார் 50 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவதில்லை. தேர்ச்சி பெறாத மாணவர்கள் இவர்கள் தங்கள் விடைத்தாள் நகல் பெற ஒரு தாளுக்கு ரூ.300 வீதம் செலுத்த வேண்டும் என்கிறது பல்கலைக் கழகம். ஒரு பக்கத்துக்குநகல் பெற ரூ.2 வீதம் கொடுத்தால் போதும் என்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம். ஆனால், அது எத்தனை பக்கமாக இருந்தாலும் இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் பெறுவதற்கான கட்டணம் ரூ.300தான். சில கல்லூரிகள் இதைவிடக் கூடுதலாகவும் கட்டணம் வசூலிக்கின்றன. விடைத்தாள் நகலைப் பார்த்தவுடன் மாணவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது. ஏனெனில், மாணவர்கள் எழுதிய விடைத்தாளில் பல பக்கங்களில் திருத்தப்பட்டிருக்காது. திருத்தப்பட்டிருந்தாலும் அதற்கு மதிப்பெண் போடப்பட்டிருக்காது. மதிப் பெண் போடப்பட்டிருந்தாலும் அது முதல் பக்கத்தில் இட்டுக் கூட்டப்பட்டிருக்காது. எப்படியோ சம்பந்தப்பட்டவர் தேர்ச்சி பெற்றிருக்க முடியாது. அந்த விடைத்தாள் நகலைக் கல்லூரி ஆசிரியரிடம் காட்டி கூடுதல்மதிப்பெண் வரும் என்று தெரிந்தால் கையெழுத்துப் பெற்று மீண்டும் ரூ.400 கட்டி மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் பெரும்பாலானவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் கிடைக்காது. தலைவிதி என்று சொல்லிப் பல மாணவர்களும் பெற்றோரும் மீண்டும் விண்ணப்பிக்க மாட்டார்கள். ஆனால் கண்டிப்பாகக் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் மாணவர்கள் பலர் மீண்டும் ரூ.3000 கட்டி விண்ணப்பிப்பார்கள். அதிலும் ஒரு சிலருக்குத்தான் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். கூடுதல் மதிப்பெண் பெற்றால் ரூ.3000 திரும்பக் கொடுக்கப்படும். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் முதலில் கட்டிய ரூ.700 (ரூ.300 ரூ.400) திரும்பத் தரப்படமாட்டாது.ஆண்டுக்குப் பல கோடி ரூபாயை மறு மதிப்பீட்டுக் கட்டணம் என்ற பெயரால் வசூலிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் கூடுதலாகக் கல்விக் கட்டணமாக வசூலிக்கும் தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பது தெரியவில்லை. மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்போரில் 60 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற அனுமதிக்கக் கூடாது என்று அண்ணா பல்கலைக் கழக உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் விடைத்தாளை யாரும் சரியாக மதிப்பிடுவது கிடையாது. தாங்கள் எழுதியது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். விடைத்தாள் நகலைக் கல்லூரி ஆசிரியர்களிடம் காட்டி, அவர்கள் திருப்தியடைந்த பின்தான் மீண்டும் பணம் கட்டுகின்றனர். ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பேசுகிறோம். ஆனால் தேர்வு முறையில் ஏற்படும் குளறுபடிகளாலும் ஆசிரியர்களின் அலட்சியத்தாலும் ஏற்படும் மனப் பிரச்னைகளுக்குத் தீர்வென்ன என்பது குறித்தும் அண்ணா பல்கலைக் கழகமும் அரசும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.மொத்தமுள்ள 570-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இந்த ஆண்டு 37 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்.

நிலைமை இவ்வாறு இருக்க மாணவர்களின் திறனைச் சோதிக்கும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வராவிட்டால் உலக அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் தனது பெருமையை இழக்கும் நாள்வெகு தொலைவில் இல்லை. -ஆர்.வேல்முருகன் மறு மதிப்பீட்டில் ஈட்டும் கோடிகள் கடந்த 6 ஆண்டுகளில் மறு மதிப்பீடு என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களிடம் இருந்து வசூலித்திருக்கும் தொகை சுமார் ரூ.90 கோடி.ஒவ்வோராண்டும் இது அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இதுதான் தண்டனையா?

 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியரை கல்லூரி முதல்வர்தான் தீர்மானிக்கிறார். இனிமேல் இவ்வாறு தவறு இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட அனுமதிப்பதில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் தீர்மானித்து 1070 பேராசிரியர்களைத் தேர்வுத்தாள் திருத்தும்பணியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது.

கலக்கும் விடியோக்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு முறையைக் கிண்டலடித்து மெட்ராஸ் சென்ட்ரல் என்ற பெயரில் இணையதளத்தில் யு டியூபில் வெளியிடப்பட்ட விடியோக்கள் மாணவ, மாணவியரிடம் மிகவும் பிரபலம். மகிழ்ச்சியுடன் இருக்கும் நேரத்தில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் 16 மதிப்பெண் கேள்விக்கு 18 மதிப்பெண் போடுவதும், சோகத்தில் இருக்கும்போது பேப்பரையே திருத்தாமல் குறைந்த மதிப்பெண் போட்டு மாணவரை தேர்ச்சி செய்யவிடாமல் தடுப்பதும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவோரின் மனநிலையைப் புரியவைக்கிறது.

ஒரு துறையைச் சேர்ந்தவர்கள் வேறு துறை மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதாகவும் விடியோ வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எப்படித் தேர்ச்சிபெற்றேன் என்பதே தெரியாமல் சிலர் பேசிக் கொள்ளும் விடியோவும் வைரலாகப் பரவியுள்ளது.இந்த விடியோக்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மறு மதிப்பீட்டு முறையையும் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளையும் தோலுரித்துக் காட்டுகிறது. தேர்வு முடிவுகளில் தாமதம்... அண்ணா பல்கலைக்கழகத்தின் மறு மதிப்பீட்டுத் தேர்வு முடிகள் கடந்த ஆக. இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

மிகச்சிறந்த தொழில் நுட்பப் பல்கலைக் கழகம் என்று கூறிக் கொள்ளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மறு மதிப்பீட்டு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கல்களால் மாணவர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இணையதளத்தில் பார்க்கும்போது தேர்வு முடிவுகள் வரவில்லை. நேரில் சென்று கேட்டபோது விரைவில் வெளியிடப்படும் என்று பலமுறை கூறினார்கள். இறுதியில் ஒருவழியாக தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்திலேயே தொழில் நுட்பக் கோளாறென்றால்...?

விடுமுறை நாட்களில் பயிற்சியா? பழிவாங்கும் நடவடிக்கையா? பள்ளி கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் கொந்தளிப்பு

விடுமுறை நாட்களில் பயிற்சியா? பழிவாங்கும் நடவடிக்கையா? பள்ளி கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் கொந்தளிப்பு


டிசம்பர் 28 - திருச்சியில் TET நிபந்தனை ஆசிரியர்களின் சிறப்புக் கூட்டம்.

டிசம்பர் 28 - திருச்சியில் TET நிபந்தனை ஆசிரியர்களின் சிறப்புக் கூட்டம்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் காரணமாக தமிழகத்தில் TET நிபந்தனைகளால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

TET நிபந்தனைகள் மூலம் பாதிக்கப்பட்ட பணியில் உள்ள சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், சிறுபான்மையினர் பள்ளிகள், அரசு உதவி பெறும் சிறுபான்மை அற்ற பள்ளி ஆசிரியர்களில் தற்போது அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு TET லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இன்றுவரை சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் முறையான கல்வி தகுதிகளுடன்  அரசு அனுமதி பெற்று பணியில் சேர்ந்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக பணி புரிந்து வரும் ஆசிரியர்களுக்கு TET லிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

இதன் மூலம் முறைப்படி கிடைக்க வேண்டிய பணிப்பாதுகாப்பு மற்றும் ஊதிய பலன்கள் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை.

எனவே TET நிபந்தனை ஆசிரியர்கள் சார்ந்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் சார்ந்த கூட்டம் திருச்சி மாவட்டத்தில் வரும் டிசம்பர் 28 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடத்த குழு முதன்மை உறுப்பினர்களால் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

ஆகவே TET நிபந்தனைகளால் பாதிக்கப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

🙏🏾

மேலும் தகவல்களுக்கு,

பூபதி : 9443826203
உதய குமார் : 9865021999
ராஜசேகர் : 9952660662
சந்துரு : 7708582806
சிவஞானம் : 9944246797

Periyar Institute of Distance Education Examinations for December 2017 (which has been scheduled from 28-12-2017) has been postponed

Periyar Institute of Distance Education Examinations for December 2017 (which has been scheduled from 28-12-2017) has been postponed



காலியாக உள்ள 2500கணினி அறிவியல் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

காலியாக உள்ள 2500கணினி அறிவியல் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்


கை கட்டி நின்ற ஆட்சித்தலைவர்!!!

கை கட்டி நின்ற ஆட்சித்தலைவர்!!!


திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் சிறந்த கல்வி பணி ஆற்றிவரும் முதன்மை கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டார்.

விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் மாணவிக்கு வழங்கப்பட்டது.

அந்த மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியரிடம் " நான் படித்து உங்களை போல மாவட்ட ஆட்சியர் ஆக போகிறேன்" என்றார்.

உடனே நம் மதிப்புமிகு ஆட்சியர் " வாழ்த்துக்கள் மோனிஷா! என் காரில் என் இருக்கையில் உட்கார்ந்து கொள்" என கூறி யாரும் எதிர்பாராத நிலையில் அந்த மாணவியை சற்று நேரம் ஆட்சியரின் சைரன் பொருத்திய அரசு காரில் தன் இருக்கையில் அமர வைத்து தான் நின்று கொண்டு அந்த மாணவியை புகைப்படம் எடுக்க சொன்னார்.

பின்னர் அந்த மாணவியிடம், " இந்த புகைப்படத்தை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் எப்போதும் இருக்கும்.

நானும் உன்னை போல்தான் அரசு பள்ளியில் படித்துதான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன்" என்றார்.

இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் 28ம் தேதி துவக்கம்

தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் 28ம் தேதி துவக்கம்

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் 28ம் தேதி நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அரசுஉயர்நிலைப் பள்ளிகளில் கடந்த 4 ஆண்டுகளாக 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருந்து வருகின்றன.இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய தேர்வுக்கான பணிகளை செய்ய உரிய வழிகாட்டுதல் இல்லாமல் 9000 உயர்நிலைப் பள்ளிகள் திணறி வருகின்றன.

இந்நிலையில் சீனியாரிட்டி குறித்த பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தயாரித்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் 28 மற்றும் 29ம் தேதிகளில் தலைமை ஆசிரியர்பணி நியமன கவுன்சலிங் நடக்கும். இதில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்பணியிடங்கள் பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டிபடி வழங்கப்பட உள்ளன.

மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் பகுதி நேர ஆசிரியர்களின் பெயர் பட்டியலை தயாரிக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.

மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் பகுதி நேர ஆசிரியர்களின் பெயர் பட்டியலை தயாரிக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு. 


சவுத் இந்தியன் வங்கியில் கிளார்க் வேலை

சவுத் இந்தியன் வங்கியில் கிளார்க் வேலை


பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 468 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து வரும் 30க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 468

பணி: Probationary Clerks

பணியிடம்: ஆந்திரா, தமிழ்நாடு, தில்லி, தெலங்கானா கேரளா

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. தமிழ்நாடு - 68
2. கேரளா - 340
3. ஆந்திரா மற்றும் தெலங்கானா - 35
4. தில்லி என்சிஆர் - 25

தகுதி: பத்தாம், +2 மற்றும் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 31.12.2017 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.01.1992 மற்றும் 31.12.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.11765 - 31,540

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.southindianbank.com/UserFiles/file/Notification_recruitment_clerks_2017-2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

11-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் சி.பா.ஆதித்தனார் வரலாறு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

11-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் சி.பா.ஆதித்தனார் வரலாறு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்  பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப்படுகின்றன.


சமூக பணிகள் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஊடக தமிழில் ஆதித்தனார் கொண்டு வந்த எழுத்துநடை  பாட திட்டத்தில் இடம் பெறும்.

11-ம் வகுப்பு  ஊடக தமிழ் பகுதியில், சி.பா.ஆதித்தனார் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் மேலும்  சி.பா. ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது அறிமுகம் – செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது அறிமுகம் – செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் 192 ஆசிரியர்களை தேர்வு செய்து கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன், 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறினார்.

பாலிடெக்னிக் விரிவுரையாளருக்கான தேர்வு முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஓய்வூதியம் மீட்பு இயக்கம்அறிவிப்பு

ஓய்வூதியம் மீட்பு இயக்கம்அறிவிப்பு



*ஓய்வூதியம் மீட்பு இயக்கம்*
*அறிவிப்பு*

*27.12.17 அன்று ஒய்வூதியம் மீட்பு இயக்கம் சார்பில் திண்டுக்கலில் நடைபெற இருந்த மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தொடக்கக்கல்வி  இயக்குனர் உத்தரவுப்படி
27.12.2017 முதல் 30.12.2017 வரை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சிகள் நடைபெறும் காரணத்தினால் 27.12.17 ம் தேதிய கூட்டம் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.*
*ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 07.01.2018 (ஞாயிறு)  அன்று திண்டுக்கலில் நடைபெறும்.*
*அனைத்து CPS நண்பர்களுக்கும் இதனைத் தெரிவித்து ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.*
இவண்
*ஓய்வூதியம் மீட்பு இயக்கம்*
*மாநில ஒருங்கிணைப்பு குழு*
*திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்*
*திரு.சி.கார்த்திக்*
*9865445689*
*திரு.த.தாமஸ் சேவியர்*
*9789395508*
*திரு.ச .சவரி மணி*
*701024 7791*


DSE - HIGH/ HR SEC SCHOOL H.M PROMOTION | ONLINE COUNSELLING REG DIRECTOR PROCEEDINGS | 26.12.2017

DSE - HIGH/ HR SEC SCHOOL H.M PROMOTION | ONLINE COUNSELLING REG DIRECTOR PROCEEDINGS | 26.12.2017



தருமபுரி - DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி மற்றும் பயிற்சி நடைபெறும் மையங்கள் விவரம்!!

தருமபுரி - DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி மற்றும் பயிற்சி நடைபெறும் மையங்கள் விவரம்!!



இராமநாதபுரம் : 02.01.2018 அன்று உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் செயல்முறைகள்

இராமநாதபுரம் : 02.01.2018 அன்று உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் செயல்முறைகள்


Flash News : சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து

Flash News : சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து

சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 முறைகேடுகளை யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். முறைகேடுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் பாடத்திட்டங்கள் குறித்த கருத்துகள் பரிசீலித்து வரப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார். சமூக பணிகள் மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் பாடத்துடன் நற்பண்புகளை கற்பிக்க ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.


சனி, 23 டிசம்பர், 2017

செவிலியர்களுக்கு முறையான ஊதியம் தர வேண்டும்!

செவிலியர்களுக்கு முறையான ஊதியம் தர வேண்டும்!

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கான முறையான ஊதியத்தைத் தருமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முறையான ஊதியம் தரப்படவில்லை என்று தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் செவிலியர் சங்கங்களின் சார்பில் சமீபகாலமாகப் போராட்டங்கள் நடைபெற்றன. ஏழாவது ஊதிய ஆணைக்குழு பரிந்துரையின்படி செவிலியர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இவர்களின் போராட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்நிலையில், மக்களவையில் நேற்று(டிசம்பர் 22) உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை முறைப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்திந்திய செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான ஊதியம் தொடர்பாக, தேவைப்பட்டால் மாநில அரசுகள் தனியாக சட்டம் இயற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.பி.நட்டா குறிப்பிட்டார்.

hasdddgs

 ndnndvnvn