Today Rasipalan 22.12.2017
மேஷம் உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.
வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
ரிஷபம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
மிதுனம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
கடகம் மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
சிம்மம் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
கன்னி குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
துலாம் பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
விருச்சிகம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
தனுசு குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
மகரம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
கும்பம் குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
மீனம் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக