வியாழன், 28 டிசம்பர், 2017

12 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ( CEO ) இடமாற்றம்: 6 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

12 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ( CEO ) இடமாற்றம்: 6 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

பள்ளிக்கல்வித்துறையில் 12 மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், 6 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக பள்ளிக்கல்வி பணியில் முதன்மை கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான பதவியில் பணிபுரிந்து வரும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் 12 பேர் நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். அதன்படி, ராமநாதபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவாரூர், விருதுநகர், திருநெல்வேலி, கரூர், கோவை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கும், இணையான வேறு பதவிக்கும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.மேலும், 6 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

அதன்படி, கோவை, புதுக்கோட்டை, சென்னை தெற்கு, திருவண்ணாமலை,விருதுநகர், மதுரை ஆகிய 6 கல்வி மாவட்டங்களில் பணிபுரியும் மாவட்ட கல்வி அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அதிகாரியாகவும், பள்ளி கல்வித்துறையில் அதற்கு இணையான வேறு பதவிகளிலும் பணியமர்த்தப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

hasdddgs

 ndnndvnvn