வெள்ளி, 22 டிசம்பர், 2017

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது:தகுதியான பள்ளிகளை தேர்வுசெய்ய குழு

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது:தகுதியான பள்ளிகளை தேர்வுசெய்ய குழு

                                          ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகளுக்கு 
புதுமைப்பள்ளி விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு தகுதியுடைய பள்ளிகளை தேர்வுசெய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் மாநில அளவில் ஒரு தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

                  இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் 
பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, கற்றல் திறன் மேம்பாடு, கற்பித்தலில் புதுமை, அடிப்படை வசதிகள் என அனைத்து வகையிலும் புதுமையான விதத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி, ஓர் உயர்நிலைப்பள்ளி, ஒரு மேல்நிலைப்பள்ளி என 4 பள்ளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும்.விருதுக்கு தேர்வுசெய்யப்படும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சமும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.2லட்சமும் வழங்கப்படும்.

                               புதுமைப்பள்ளி விருதுக்காக பள்ளிகளை தேர்வுசெய்ய 
மாநில அளவில் ஒரு தேர்வுக்குழுஅமைக்கப்படும்.பள்ளிக்கல்வி இயக்குநர் இதன் தலைவராகவும், தொடக்கக்கல்வி இயக்குநர், மாநில கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் ஆகியோர்உறுப்பினர்களாகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலை) உறுப்பினர் செயலராகவும் இருப்பர்.மாநில தேர்வுக் குழுவுக்கு பள்ளிகளை தேர்வுசெய்து பரிந்துரை செய்ய மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் ஒரு தேர்வுக்குழு அமைக்கப்படும்.

                                  பள்ளிகளை தேர்வுசெய்யும்போது, சுத்திகரிக்கப்பட்ட 
குடிநீர் வசதி, நவீன கழிப்பறைகள், கற்கும் சூழலை மேம்படுத்த வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டுதல், ஆங்கில பேச்சுப்பயிற்சி, யோகா பயிற்சி கணினிவழி கற்றல் முறை வசதிகள், நூலக வசதி ஆகிய விஷயங்கள் கருத்தில்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

hasdddgs

 ndnndvnvn