Flash News : நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்.
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
மக்கள் விருப்பதின் பேரிலேயே ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்றும், வங்கி எண், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை மக்கள் தாங்களாகவே இணைத்துக்கொள்ள வேணடும் என்றும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யும் மத்திய அரசின் கருத்தையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018 பிப்ரவரி 6-ஆம் தேதியில் இருந்து மார்ச் 31-ஆம் தேதிக்கு நீட்டிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மதிய உணவு திட்டம், மருத்துவ வசதிகள் பெறுதல், சிலிண்டர் மானியம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசு வழங்கும் நலத்திட்டத்துக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள், சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன்பு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இது தொடர்பாக வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும், செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018 பிப்ரவரி 6-ஆம் தேதியில் இருந்து மார்ச் 31-ஆம் தேதிக்கு நீட்டிப்பது குறித்தும் அப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, பான் கார்டு, வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை 2018 மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், செல்லிட்டப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு 2018 பிப்ரவரி 6-ஆம் தேதி என்பதில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலயில, ஆதார் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் ஜனவரி 17-ஆம் தேதி தொடங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக